தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை அல்லது மாலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்த பணியாரத்தை பலர் செய்வதுண்டு. இந்த பால் பணியாரத்திற்கு மாப்பிள்ளை பணியாரம் என்றும் சில இடங்களில் கூறுவதுண்டு.

-விளம்பரம்-

வீட்டில் மாவை அரைத்து, அந்த மாவு புளிக்க கூட தேவையில்லை. கெட்டிப் பதத்தில் இருக்கும், மாவை எடுத்து ஒரு சூப்பரான பால் பணியாரத்தை எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த கஷ்டமும் வேண்டாம். ஆரோக்கியமான, நிறைவான உணவு இது. இப்பவே இத செஞ்சுதான் பாருங்களேன்! எப்படி இருக்குதுன்னு. திரும்பத்திரும்ப கட்டாயம்  இந்த பால் பணியாரத்தை செஞ்சிட்டே இருப்பீங்க.

- Advertisement -
Print
5 from 1 vote

பால் பணியாரம் | Paal Paniyaaram Recipe In Tamil

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு சாப்பிட்டு பாருங்கள். சாதம் அமிர்தமாக உங்களுக்கு தெரியும். பில்டப் அதிகமாக உள்ளதா. யோசிக்காம ஒரே ஒருமுறை உருளைக்கிழங்கு வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே தெரியும் இதனுடைய ருசி. உருளைக்கிழங்கை வைத்து வறுவல் பொறியியல் என்று பலவகை செய்யலாம் அது போல் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamilnadu
Keyword: Paal Paniyaaram
Calories: 654kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் உளுந்து
  • 1 மூடி தேங்காய்
  • 1/4 கப் சீனி
  • 2 ஏலக்காய்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 2 கப் எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைதுருவி எடுத்து கொள்ளவும். ஏலக்காயை பொடிச் செய்து கொள்ளவும்.
  • அரிசி,உளுந்து ஊறியதும் எடுத்து தண்ணீர் வடித்து விட்டு மற்றொரு முறை அலசி விட்டு கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து முழு உளுந்து இல்லாமல் நன்கு மையாக அரைக்கவும்.
  • முழு உளுந்து அரைப்படாமல் இருந்தால் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். இட்லி மாவு பதத்தில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு ஒரு கப் தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றவும். வெந்நீரில் ஊற வைத்த தேங்காயைமிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் சீனியை சேர்த்து கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி கிள்ளி போடவும்.
  • உருண்டைகள் வெந்ததும் சிவக்க விடாமல் எண்ணெயை வடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
  • அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தேங்காய் பாலில் இந்த சிறிய உருண்டைகளை போடவும். பணியாரத்தை அரை மணி நேரம் தேங்காய் பாலில் ஊற வைத்து பிறகுபரிமாறவும்.
  • சுவையான காரைக்குடி பால் பணியாரம் ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 654kcal | Carbohydrates: 43g | Protein: 2g | Sodium: 432mg | Potassium: 654mg | Sugar: 7.6g | Calcium: 12mg