காலை டிபனுக்கு ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

- Advertisement -

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை பொறுத்து தான் அவற்றின் சுவை மாறுபடுகிறது. அதிலும் காலை மற்றும் மாலை வேளையில் எளிமையான உணவுகளை மட்டும் தான் செய்து சாப்பிடுகிறோம். அவ்வாறு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இவ்வாறான உணவுகளை தான் அடிக்கடி செய்கின்றோம்.

-விளம்பரம்-

ஆனால் ஒருமுறை இப்படி வித்தியாசமாக ஜவ்வரிசியில் ஒரு கிச்சடி செய்து பாருங்கள். இதனை கேட்கும்போதே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தான் இருக்கும் இதன் சுவையும் இருக்கும். இதனை செய்வதும் மிகவும் சுலபமான விஷயம் தான். வாருங்கள் இந்த சுவையான ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.ஜவ்வரிசி உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் ஜவ்வரிசி  சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஆரோக்கியமின்மையை சரி செய்து விடும் தன்மை இந்த ஜவ்வரிசி உண்டு.

- Advertisement -

ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த ஜவ்வரிசியை பொடித்து ஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

Print
4 from 1 vote

ஜவ்வரிசி கிச்சடி | Sago Kichadi Recipe In Tamil

இந்த சுவையான ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.ஜவ்வரிசி உடலுக்குஎவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் ஜவ்வரிசி  சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஆரோக்கியமின்மையை சரி செய்து விடும் தன்மை இந்த ஜவ்வரிசி உண்டு. ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒருவகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த ஜவ்வரிசியை பொடித்துஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: mumbai
Keyword: Sago Kichadi
Yield: 4
Calories: 332kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் ஜவ்வரிசி
  • 3 உருளைக் கிழங்கு
  • 1/2 கப் வறுத்த வேர்கடலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்புன் கரம் மசாலா
  • 1/2 ஸ்புன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்புன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • ஜவ்வரிசி மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும். வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்ததை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.
  • மிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும், ஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனுடன் குருமா, மசாலா குழம்பு வகைகள் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 332kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 7g