ஆட்டு இறைச்சியில் அவ்வளவு நன்மைகள் இருக்கு என்னதான் ஆட்டில் உள்ள எல்லா பாகங்களும் உணவுக்கு நம்ம எடுத்துக்கிட்டாலும் எல்லாத்தையும் விட ஈரல்ல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகம். காரணம் ஈரல்களில் நமக்கு அதிக அளவு ஹீமோகுளோபின் உற்பத்தி ஆகுறதுக்கு உதவி பண்ணும். முக்கியமா இந்த ஈரல்களை கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு அதிகமா கொடுக்கிறாங்க . காரணம் இது வந்து ஹீமோகுளோபின் லெவல் அதிகப்படுத்துவதும் அதில் இருக்கிற இரும்பு சத்துக்கள் விட்டமின்கள் அப்படிங்கிற விஷயங்கள் தான்.
கால்சியம் அதெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கிறதுனால ஈரல் மண்ணீரலும் உணவுல அதிகமாக கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஈரல்ல நாம் மதுரை ஸ்டைலில் கிரேவி வச்சு சாப்பிட போறோம். இந்த மதுரை ஸ்டைல் கிரேவி எப்படி பண்றது பார்க்கலாம். உங்க வீட்டில ஒரு ஒன்பது மாத குழந்தை இருக்காங்க அப்படின்னா கூட நீங்க இந்த ஈரல் வாங்கி நார்மலா வேக வைக்கிற மாதிரி வேக வைத்துவிட்டு அதை அப்படியே கையாலே மசிச்சு கூட கொடுக்கலாம்.
இந்த ஈரல் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. நீங்க ஆட்டுடைய ஈரல் வந்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவளுக்கு நல்ல இரும்புசத்து அதிகமாக கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதிக படுத்துவதற்கு இன்ஜெக்ஷன் எல்லாமே போட்டு அதுக்கு அப்புறம் வாராவாரம் வந்து அந்த இன்ஜெக்ஷன் எடுத்துக்கணும்.
இந்த பிரச்சனை வரக்கூடாது அப்படிங்கற பட்சத்துல நீங்க ஆட்டோட ஈரல் மண்ணீரல் இது கிடைச்சதுன்னா இதை வாங்கி சாப்பிட்டு இந்த ஈரல் அல்லது மண்ணீரல் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் வீட்டில் செய்து குடிச்சீங்கன்னா உங்களுக்கு அப்படியே ஹீமோகுளோபின் லெவல் இன்கிரீஸ் ஆகும். இவ்வளவு சத்துக்கள் இருக்கிற இந்த ஈரல் வச்சி மதுரை ஸ்டைலில் கிரேவி எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
ஆட்டு ஈரல் கிரேவி | Mutton Liver Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ ஈரல்
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 ஸ்பூன் கறிமசாலா
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையானஅளவு
- 2 கிரம்பு
- 1 பட்டை
- 1 ஏலக்காய்
செய்முறை
- முதலில் ஆட்டு ஈரலை நீர் விட்டு நன்றாக கழுவி எடுக்க வேண்டும். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் கழுவ வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு , ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு ஈரலை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்றாக கலந்தபிறகு தேவையானஅளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- பின் மிளகாய்தூள், கறி மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி ஈரல் வேகுவதற்கு தேவையான அளவு நீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
- ஒரு ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும். பிறகு ஈரலில் உள்ள நீர் கிரேவி பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளரிவிட்டு இறக்கினால் சுவையான மதுரை ஸ்டைல் ஆட்டு ஈரல் கிரேவி தயார்.