- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- snacks
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், கட்லெட் பிரபலமானவை.
காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த பலாக்கொட்டை கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான பலாக்கொட்டை சொதி குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
Ingredients
Method
குக்கரில் பலாக்கொட்டை, உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் வைத்து எடுக்கவும்.
பிறகு இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுளில் அரைத்த பலாக்கொட்டை, துருவிய கேரட், குடைமிளகாய், பெரிய வெங்காயம், துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலை, பிரட் தூள், எலுமிச்சை பழச்சாறு, இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மாங்காய் தூள், கருப்பு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
பின்னர் சிறிதளவு கட்லெட் கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.
பின்னர் சிறிய கிண்ணத்தில், சோள மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைக்கவும்.
பின் செய்த கட்லெட்டை சோள மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டவும். இதை 10 நிமிடம் பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.
பின்னர் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்த கட்லெட்டை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
சுவையான பலாகொட்டை கட்லெட் தயார்.






