நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி தோசை எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடுற மாதிரி பாம்பே சட்னி செஞ்சு அசத்திடலாம். நம்ம வீட்ல அன்றாடம் இருக்கிற பொருட்கள் மட்டுமே இந்த பாம்பே சட்னிக்கு போதுமானது. எப்பவுமே நம்ம பூரி போட்டா அதுக்கு உருளைக்கிழங்கு மசால் செஞ்சி சாப்பிடுவோம்.
ஆனால் நம்ம வீட்ல உருளைக்கிழங்கு இல்லை அப்படின்னா கவலையே படாதீங்க இந்த பாம்பே சட்னியும் உருளைக்கிழங்கு மசால் மாதிரியே அதே டேஸ்ட்ல கிடைக்கும். சாப்பிடுறதுக்கும் இந்த பாம்பே சட்னி சூப்பரா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரின எதுக்கு வேணும்னாலும் வச்சு சாப்பிடலாம் எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆக உருளைக்கிழங்கு மசால் மாதிரியே இருக்கும்.
உங்க வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டாங்க ஆனா வீட்ல பெரிய காய்கறிகள் எதுவும் இல்லனா சப்பாத்தி இல்லனா பூரி செஞ்சு அதுக்கு இந்த பாம்பே சட்னிய சைடு டிஷ்ஷா வச்சு கொடுத்திடலாம் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நமக்கு அவசர நேரத்துல இந்த பாம்பே சட்னி ரொம்பவே கை கொடுக்கும். 15 நிமிஷத்துல நம்ம இந்த பாம்பே சட்னியை ஃபுல்லாவே செஞ்சு முடிச்சிடலாம்.
தக்காளி வெங்காயம் வதங்கறதுக்கான நேரம் மட்டும்தான் நமக்கு வதங்கிடுச்சுன்னா சீக்கிரமாவே இந்த பாம்பே சட்னி ரெடி ஆகிடும். செம சூப்பரான இந்த பாம்பே சட்னியை நீங்களும் வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உருளைக்கிழங்கு இல்லை காய்கறிகள் இல்லை என்று நீங்கள் கவலைப்பட மாட்டீங்க டக்குனு இந்த பாம்பே சட்னி செஞ்சுடுவீங்க. இப்ப வாங்க இந்த செம சூப்பரான பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
பாம்பே சட்னி | Bombay chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் கடலை மாவு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- அதில் நறுக்கிய பச்சை மிளகாய் துருவிய இஞ்சி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- அது தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- கலந்து வைத்துள்ள கடலை மாவு கரைசலை சேர்த்து நன்றாக வேக வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பாம்பே சட்னி தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : ருசியான அதே நேரம் ஆரோக்கியமான தூதுவளை சட்னி! வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!