- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, chutney
நாம் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி மல்லி சட்னி புதினா சட்னி வெங்காய சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி என விதவிதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியம் என்று வரும்பொழுது பிரண்டை சட்னி, பாசிப்பயறு சட்னி, சுண்டைக்காய் துவையல் என மருந்து மூலிகைகளில் நாம் சட்னி செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் நாம் இன்று தூதுவளை சட்னி செய்யப் போகிறோம்.
பொதுவாக இந்த மழைக்காலத்தில் அனைவருக்கும் இருமல் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அந்த சமயத்தில் ஒரு சிலருக்கு வீட்டு வைத்தியமே கை கொடுக்கும். நாம் இருமல் சளிக்கு சுக்கு காபி, வெற்றிலை கசாயம், என பல விதமான கை வைத்தியங்கள் செய்து சாப்பிட்டு இருப்போம். தூதுவளையில் கூட நாம் தூதுவளை முட்டை பொரியல் தூதுவளை கசாயம் என செய்து சாப்பிட்டிருப்போம் அதன் மூலம் நமக்கு சளி இருமல் முற்றிலும் குணமாகி இருக்கும்.
அந்த வகையில் நாம் என்று தூதுவளையில் கொஞ்சம் வித்தியாசமாக சட்னி செய்ய போகிறோம். இந்த தூதுவளை சட்னியை நாம் இட்லி, தோசை சப்பாத்தி வெறும் சாதம் மற்றும் புளிசாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் என அனைத்திற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுவையும் அருமையாக இருக்கும் அதே சமயத்தில் நமக்கு இருக்கும் சளி இருமல் போன்றவைகளும் குணமாகிவிடும் உங்கள் வீட்டில் யாருக்காவது சளி இருமல் இருக்கின்ற சமயத்தில் இந்த தூதுவளை சட்னியை செய்து கொடுங்கள் அவர்களது தொண்டைக்கு இதமாக ருசியாகவும் இருக்கும். வாங்க இப்போ தூதுவளை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் தூதுவளையை பறித்து மேலுள்ள முட்களை நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் வற்றலை போட்டு வறுத்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிய பின்னர் தூதுவளை இலைகளை போட்டு நன்றாக சுருள வதக்க வேண்டும்.எடுத்து வைத்துள்ள புளி சேர்த்து வதக்கி அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நன்றாக ஆற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி அதை சேர்த்து உடன் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையில் கொட்டி விட வேண்டும்.
ஆரோக்கியமான தூதுவளை சட்னி தயார்






