ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

- Advertisement -

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமா வகைகள் செய்யலாம். ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ் களை செய்யலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான ஆலு மேத்தி சப்ஜியை அசைவ சுவையில் எப்படி ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-

உருளைக்கிழங்கை வைத்து வெறும் வறுவல்,குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. அருமையான சப்பாத்தி, புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு இந்த ஆலு மேத்தி சப்ஜி செய்யுங்க.வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

ஆலு மேத்தி சப்ஜி, அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம்.பஞ்சாபி தாபா ஸ்டைல் ‘ஆலு மேத்தி சப்ஜி’! சாப்பிட அருமையாக இருக்கும். இந்த ஆலு மேத்தி சப்ஜி உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

உருளைக்கிழங்கை வைத்து குருமா, வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில் ஒரு ஆலு மேத்தி சப்ஜி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது வரை நீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்கு சூப்பரான சைட் டிஷ் இது.தேவையான பொருள்கள்

Print
5 from 1 vote

ஆலு மேத்தி சப்ஜி | Aloo Methi Sabji Recipe In Tamil

உருளைக்கிழங்கை வைத்து குருமா, வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில்ஒரு ஆலு மேத்தி சப்ஜி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது வரைநீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது.மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்குசூப்பரான சைட் டிஷ் இது.தேவையான பொருள்கள்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Aloo Methi Sabji
Yield: 4
Calories: 230kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 4 உருளைக்கிழங்கு
 • 2 தக்காளி
 • 1 கட்டு மேத்தி கீரை
 • 4 பல் பூண்டு
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2 ப்ரிஞ்சி இலை

செய்முறை

 • தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கீரையை ஆய்ந்து 3 முறை தண்ணீரில் அலசி வைக்கவும்.
 • உருளைக்கிழங்கை தோலுரித்து சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
 • பூண்டை தோலுரித்து சிறியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் மற்றும் ப்ரிஞ்சி இலை தாளித்து, பூண்டு போட்டு வதக்கவும்.
 • பிறகு உருளைக்கிழங்கு மற்றும் கீரையைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். வதக்கியவற்றை குக்கரில் மாற்றி தூள் வகைகள், தக்காளி விழுது மற்றும் உப்புப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 2 விசில் வரவிடவும்.
 • ப்ரஷர் அடங்கியதும் உருளைக்கிழங்கை லேசாக மசித்துவிடவும்.  கிரேவிபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
 • சுவையானஆலு மேத்தி சப்ஜி தயார்.

செய்முறை குறிப்புகள்

சப்பாத்தி,பூரிக்கு நல்ல சைட் டிஷ்.
 

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 150mg