- Advertisement -
Home அசைவம் கருவாடு வைத்து சுவையான சாதம் இப்படி ஒரு முறை மதிய உணவிற்கு செய்து அசத்துங்கள்!!

கருவாடு வைத்து சுவையான சாதம் இப்படி ஒரு முறை மதிய உணவிற்கு செய்து அசத்துங்கள்!!

- Advertisement -

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா.

அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான கருவாடு சாதம் ரெசிபி. பொதுவாக கருவாடு என்று சொன்னாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சிலருக்கு சிக்கன், மட்டன், மீனை விட இந்த கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். இதுவரை கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்திருப்போம்.

- Advertisement -

அந்த வகையில் கருவாடு வைத்து ஒரு முறை சுவையான இந்த கருவாடு சாதம் செய்து பாருங்கள். நன்கு மணக்க மணக்க காரசாரமாக சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை நீங்கள் வீட்டில் செய்தால் கண்டிப்பாக எல்லாரும் இரண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவார்கள் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இதில் நாம் கருவாடை பொரித்து சேர்ப்பதால் சற்று மொறு மொறுப்பாக சாப்பிடறதுக்கு ரொம்பவே ருசியா இருக்கும். இப்போது சுவையான கருவாடு சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

Print
No ratings yet

கருவாடு சாதம் | Dry Fish Rice Recipe In Tamil

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான கருவாடு சாதம் ரெசிபி. இதுவரை கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்திருப்போம். அந்த வகையில் கருவாடு வைத்து ஒரு முறை சுவையான இந்த கருவாடு சாதம் செய்து பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Dey Fish Rice
Yield: 4 People
Calories: 76kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 250 கி நெத்திலி கருவாடு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 10 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • 2 கப் வடித்த சாதம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருவாடை நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • அதன்பிறகு நாம் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கருவாடு சாதம் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 76kcal | Carbohydrates: 5g | Protein: 37g | Fat: 3.1g | Sodium: 86mg | Potassium: 132mg | Fiber: 19g | Vitamin A: 62IU | Vitamin C: 120mg | Calcium: 37mg | Iron: 38mg

இதனையும் படியுங்கள் : நெய் மீன் கருவாடு தொக்கு