பொதுவா எவ்வளவுதான் நான் வெஜ் வகைகள் இருந்தாலும் சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு நான்வெஜ் அப்படினா அது சிக்கன்ல தான் சொல்லணும். ரெண்டு வயசு குழந்தைகள் ஆரம்பிச்சு பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த சிக்கன் ரொம்பவே பிடிக்கும். அதுலயும் ரொம்ப டேஸ்டான சிக்கன் செஞ்சு கொடுத்தா போதும் வழிச்சு வழிச்சு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சிக்கன்.
இந்த சிக்கன் வச்சு நம்ம நிறைய செய்யலாம் சிக்கன் பிரியாணி சிக்கன் தொக்கு சிக்கன் ஊறுகாய், சிக்கன் 65 அப்படின்னா எக்கச்சக்கமான சிக்கன் வெரைட்டிஸ் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சோம்பேறித்தனமாக இருக்கும் போது ரொம்பவே சிம்பிளான சிக்கன் பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள்தான் நமக்கு தேவைப்படும். ஆனால் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
இதுக்கு நமக்கு தேவைப்படுறது சிவப்பு கலர் சிக்கன் மசாலா மட்டும்தான். நமக்கு நிறைய சிக்கன் மசாலா கடைகள்ல கிடைக்கும் ஆனால் சிவப்பு கலர்ல கிடைக்கிற இந்த சிக்கன் மசாலா வச்சு இந்த சிக்கன் பிரட்டல் செய்யும்போது சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசத்துக்கு சைடிஷா வைத்து சாப்பிடலாம்.
அதுமட்டுமில்லாம தயிர் சாதத்துக்கு இந்த சிக்கன் பிரட்டல வச்சு சாப்பிட்டா எவ்ளோ சாப்பாடு வேணா சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான சிக்கன் பிரட்டல் தான் இது. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சிக்கனை வச்சு சிம்பிளான சிக்கன் பிரட்டல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
சிம்பிள் சிக்கன் பிரட்டல் | Simple Chicken Pirattal In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 3 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 3 டேபிள் ஸ்பூன் சிவப்பு கலர் சிக்கன் மசாலா
- மல்லி இலைகள் சிறிதளவு
- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 கொத்து கருவேப்பிலை
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை சேர்த்து பத்து நிமிடங்களுக்கு நன்றாக கிளறி எடுக்கவும்
- பிறகு அதில் சிக்கன் மசாலா பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
- ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை நன்றாக வேக வைக்கவும்.
- சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால்சுவையான சிக்கன் பிரட்டல் தயார்
- இதற்கு சிவப்பு கலர் சிக்கன் மசாலா மட்டுமே சுவை அருமையாக இருக்கும்
இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!