Home அசைவம் காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். எப்பவுமே கடைகளில் வாங்கி சாப்பிடுற செஸ்வான் சிக்கன் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும்போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். இத்தனை சுவையான செஸ்வான் சிக்கன் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருட்களை வைத்து செய்துவிடலாம்.

-விளம்பரம்-

இப்படி வித்தியாசமா ஹோட்டல் சுவைகளில் எல்லாரும் விருப்பப்படுற உணவை வீட்டில் செய்து கொடுக்கும் போது எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. இந்த செஸ்வான் சிக்கன் இந்தோ சீனா உணவு வகைகளில் ஒன்றாகும். இது விருந்தினருக்கு ஏற்ற அற்புதமான ஸ்பெஷல் உணவு. இதன் சுவையும் மற்ற சிக்கன் ரெசிபியை விட சற்று அதிகமாகவே இருக்கும். இந்த டிஷ் சற்று காரசார நிறைந்த உயர்ந்த வகை டிஷ். இதனை எவ்வாறு செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம். இந்த செஸ்வான் சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Print
No ratings yet

செஸ்வான் சிக்கன் | Schezwan Chicken Gravy Recipe In Tamil

அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். எப்பவுமே கடைகளில் வாங்கி சாப்பிடுற செஸ்வான் சிக்கன் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும்போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். இத்தனை சுவையான செஸ்வான் சிக்கன் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருட்களை வைத்து செய்துவிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Schezwan Chicken Gravy
Yield: 4 People
Calories: 135kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

சிக்கன் ஊற‌ வைக்க:

  • 1/4 கி சிக்கன்
  • 2 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 2 டீஸ்பூன் மைதா
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 முட்டை

கிரேவி செய்வதற்கு ‌:

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • வெங்காயத்தாள் சிறிதளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 2 டீஸ்பூன் வினிகர்
  • 2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் செஸ்வான் சாஸ்
  • 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதன் பிறகு வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் குடைமிளகாய், பெரியதாக நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • குடை மிளகாய் லேசாக வதங்கியதும் சோயா சாஸ், செஸ்வான் சாஸ், வினிகர், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் சிறிதளவு கார்ன் ப்ளவர் மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து கலந்து விடவும்.
  • இந்த கிரேவி சிறிது கெட்டியானதும் சிக்கனை‌ சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து வெங்காயத்தாள் தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான செஸ்வான் சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 135kcal | Carbohydrates: 13g | Protein: 16.9g | Fat: 7.5g | Sodium: 88mg | Potassium: 96mg | Fiber: 3.5g | Vitamin A: 74IU | Vitamin C: 64mg | Calcium: 24mg | Iron: 6.1mg

இதனையும் படியுங்கள் : ருசியான கருவேப்பிலை சிக்கன் இப்படி செஞ்சு கொடுங்க! பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க!