ருசியான கருவேப்பிலை சிக்கன் இப்படி செஞ்சு கொடுங்க! பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க!

- Advertisement -

கறிவேப்பிலை சாப்பிடுறது நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது முக்கியமா முடி கொட்டுற பிரச்சினை இருந்தால் அவங்க எல்லாரும் டெய்லியும் கருவேப்பிலை பொடி சாப்பிட்டா உங்களுக்கு முடி சூப்பரா வளரும் முடி கொட்டவே கொட்டாது. கருவேப்பிலைல நிறைய இரும்பு சத்துக்கள் இருக்கிறது ஆள தான் நம்ம கருவேப்பிலை சாப்பிடும்போது முடி கொட்டாமல் முடி அதிகமா வளருது. முடி கொட்டுற பிரச்சினை மட்டும் இல்லாம இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், செரிமான சம்பந்தமான பிரச்சினைகள்னு எல்லாமே சரியாகும்.

-விளம்பரம்-

ஆனா இந்த கருவேப்பிலைய வச்சு கருவேப்பிலை சட்னி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டாங்க கறிவேப்பிலையை நம்ம எந்தவிதமான உணவுல தாளிச்சு கொட்டினாலும் சாப்பிட மாட்டாங்க அப்போ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ஒண்ணுல நம்ம அந்த கருவேப்பிலையை போட்டு கொடுத்தா கண்டிப்பா சாப்பிடுவாங்க. அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே புடிச்சது தான் சிக்கன் அந்த சிக்கன்ல நம்ம கருவேப்பிலை சேர்த்து சுவையான கருவேப்பிலை சிக்கன் செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பியும் சாப்பிடுவாங்க அதே நேரத்துல அவங்க உடம்புக்கு கருவேப்பிலையுடன் சத்துக்களும் போய் சேரும்.

- Advertisement -

இந்த கருவேப்பிலை சிக்கனோட டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி பேப்பர் சிக்கன் 65 சில்லி சிக்கன் செய்யாமல் ஒருமுறை இந்த கருவேப்பிலை சிக்கன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க நீங்களே அடிக்கடி உங்க வீட்ல செய்வீங்க இது சாப்பிட்டவங்களும் உங்ககிட்ட வந்து அடிக்கடி கேட்பாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிரும். இந்த கருவேப்பிலை சிக்கன் செய்வது ரொம்பவே கஷ்டமும் கிடையாது ரொம்பவே எளிமையான முறையில் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கருவேப்பிலை சிக்கன் | Curry Leaves Chicken Recipe In Tamil

கருவேப்பிலை சிக்கனோட டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி பேப்பர்சிக்கன் 65 சில்லி சிக்கன் செய்யாமல் ஒருமுறை இந்த கருவேப்பிலை சிக்கன் செஞ்சு சாப்பிட்டுபாருங்க நீங்களே அடிக்கடி உங்க வீட்ல செய்வீங்க இது சாப்பிட்டவங்களும் உங்ககிட்ட வந்துஅடிக்கடி கேட்பாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சுபோயிரும். இந்த கருவேப்பிலை சிக்கன் செய்வது ரொம்பவே கஷ்டமும் கிடையாது ரொம்பவே எளிமையானமுறையில் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை சிக்கன்எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Curry Leaves Chicken
Yield: 4
Calories: 91kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1/4 கிலோ சிக்கன்
 • 1 கட்டு கறிவேப்பிலை
 • 4 பச்சை மிளகாய்
 • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைசாறு
 • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
 • 2 டீஸ்பூன் மல்லி தூள்
 • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
 • பிறகு சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மல்லிதூள் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில்வைத்து ஊற வைக்கவும்.
 • பிறகு 5 மணி நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்த சிக்கனை அடுப்பை மிதமான தீயில்வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாகவதக்கிக் கொள்ளவும்
 • பிறகு அதனுடன் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிளகாய் தூள் மல்லி தூள் சிறிதளவு உப்பு சேர்த்துநன்றாக கிளறவும்
 • அனைத்தும் சேர்ந்து ஐந்து நிமிடங்கள் வெந்த பிறகு எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கினால் சுவையான கறிவேப்பிலைசிக்கன் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 1g

இதையும் படியுங்கள் : காரசாரமான தெலுங்கானா சிக்கன் வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!