ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

- Advertisement -

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். ஆந்திராவின் சட்னி, சாம்பார், பச்சடி, துவையல் என எல்லாவற்றிலும் காரம் சற்றும் தூக்கலாகவே இருக்கும். அதற்கு காரணம் ஆந்திராவில் பயிரிடப்படும் மிளகாய் வகைகள் தான். குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா சட்னி, ரெட் சட்னி போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா இலைகள் ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம். அதனால் தான் இன்றைய பதிவில் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான்.

-விளம்பரம்-

இந்த புளிச்ச கீரையில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். ஆந்திரா மக்கள் புளிச்சக்கீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் எக்கச்சக்கமான ரெசிபிக்களைச் செய்கிறார்கள். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த கோங்குரா சாதத்தை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சாதத்தை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

- Advertisement -
Print
3.50 from 2 votes

கோங்குரா சாதம் | Gongura Satham Recipe In Tamil

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். ஆந்திராவின் சட்னி, சாம்பார், பச்சடி, துவையல் என எல்லாவற்றிலும் காரம் சற்றும் தூக்கலாகவே இருக்கும். அதற்கு காரணம் ஆந்திராவில் பயிரிடப்படும் மிளகாய் வகைகள் தான். குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா சட்னி, ரெட் சட்னி போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா இலைகள் ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம். அதனால் தான் இன்றைய பதிவில் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த கோங்குரா சாதத்தை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சாதத்தை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: andhra, Indian
Keyword: Gongura Satham
Yield: 4 People
Calories: 143kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 10 பல் பூண்டு
  • 4 வர ‌மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 கப் வேகவைத்த சாதம்

அரைக்க :

  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு                           
  • 1 டீஸ்பூன் தனியா
  • 7 பச்சை மிளகாய்
  • 4 வர ‌மிளகாய்
  • 2 கப் புளிச்ச கீரை
  • 5 பல் பூண்டு                          
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் விழுது, கீரை, நாம்‌ அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய்‌ ஊற்றி காய்ந்ததும் கடுகு, பூண்டு, பெருங்காயத்தூள், வர‌ மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்த‌ கீரை விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோங்குரா சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 143kcal | Carbohydrates: 16.1g | Protein: 7.01g | Fat: 4.6g | Saturated Fat: 0.8g | Sodium: 32mg | Potassium: 21mg | Fiber: 7g | Vitamin A: 129IU | Vitamin C: 126mg | Calcium: 9mg | Iron: 28mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோங்கூரா சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க! மிச்சம் வைக்கால் சாப்பிடுவார்கள்!