காரசாரமான தெலுங்கானா சிக்கன் வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

- Advertisement -

சிக்கன் வறுவல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சிக்கன் வறுவல் விதவிதமான சுவைகள் எப்படி செய்வாங்களோ அப்படி சமைச்சு சாப்பிடறப்போ இன்னுமே ரொம்பவே ருசியா இருக்கும். அப்படி இந்த தடவை நம்ம தெலுங்கானா சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் ரொம்பவே சுவையா இருக்கும். ரொம்பவே ஈசியாவும் செய்திடலாம்.

-விளம்பரம்-

இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் நல்ல காரசாரமான சுவைல ரொம்பவே அருமையான ருசியில் இருக்கும். இந்த சிக்கன் வறுவல் சின்னவங்ளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமான ஸ்டைல் இருக்கும் அந்த வகையில் இந்த தெலுங்கானாக்குனு ஒரு ஸ்பெஷலான ஸ்டைல்ல 

- Advertisement -

இந்த சிக்கன் வறுவல் செய்ய போறோம். நம்ம பயன்படுத்துற அதே மசாலா பொருட்களை வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் செய்ய போறோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் எல்லா சாதத்தோடையும் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இருந்தாலும் தயிர் சாதத்தோட இந்த காரசாரமான சிக்கன் வறுவல் சாப்பிடும்போது அதோட சுவை இன்னும் வேற மாதிரி இருக்கும். எப்படி ரொம்ப சுவையா இருக்குற தெலுங்கானா சிக்கன் வறுவல் எவ்வளவு சுலபமா வீட்ல செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3.50 from 2 votes

தெலுங்கானா சிக்கன் வறுவல் | Telungana Chicken Fry

சிக்கன் வறுவல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சிக்கன் வறுவல் விதவிதமான சுவைகள் எப்படி செய்வாங்களோ அப்படி சமைச்சு சாப்பிடறப்போ இன்னுமே ரொம்பவே ருசியா இருக்கும். சிக்கன் வறுவல் செய்ய போறோம். நம்ம பயன்படுத்துற அதே மசாலா பொருட்களை வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் செய்ய போறோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் எல்லா சாதத்தோடையும் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இருந்தாலும் தயிர் சாதத்தோட இந்த காரசாரமான சிக்கன் வறுவல் சாப்பிடும்போது அதோட சுவை இன்னும் வேற மாதிரி இருக்கும். எப்படி ரொம்ப சுவையா இருக்குற தெலுங்கானா சிக்கன் வறுவல் எவ்வளவு சுலபமா வீட்ல செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time11 minutes
Course: Fry, starters
Cuisine: andhra, telungana
Keyword: Telungana Chicken Fry
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 1 கப் வெங்காய விழுது
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் அரைத்து வைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக.கலந்து கொள்ளவும்.
     
  • பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் நசுக்கி அதை சிக்கனில் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு சிறிதளவு உப்பு ,எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் சிக்கனை ஊற வைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு நெய் சேர்த்து சூடானதும் அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
  •  பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.