ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம கடையில போய் எதுவும் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே அட்டகாசமான முறையில் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் ரோல் தான் செய்யப் போறோம் இந்த சிக்கன் ரோல் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.

-விளம்பரம்-

நம்ம வீட்டிலேயே செஞ்சுடலாம் டீ காபி குடிக்கும் போது ஒரே ஒரு சிக்கன் ரோல் எடுத்து சாப்டா போதும் அவ்ளோ சூப்பரா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். பேக்கரில போய் இனிமேல் இந்த மாதிரி சிக்கன் ரோல் வாங்க வேண்டிய அவசியமே கிடையாது நம்ம வீட்லையே செஞ்சிடலாம்.

- Advertisement -

ஆனா இது வீட்ல செஞ்ச மாதிரியே இருக்காது கடையில வாங்கின மாதிரி தான் இருக்கும் இதை சாப்பிடறவங்க கூட கடையில தான வாங்குனீங்க அப்படின்னு தான் கேட்பாங்க அந்த அளவுக்கு வீட்டிலேயே மொறு மொறுன்னு செமையா இந்த சிக்கன் ரோல் செஞ்சிடலாம்.

இதுக்குன்னு தனியா சிக்கன் வாங்காம வீட்ல எப்பவாவது சிக்கன் எடுக்கும் போது ஒரு நாலு பீஸ் தனியா எடுத்து வச்சு இந்த சிக்கன் ரோல் செய்து பாருங்கள். அதுக்கப்புறம் நிறைய சிக்கன் எடுத்து இந்த சிக்கன் ரோல் நிறைய செஞ்சு சாப்பிடலாம். இவ்வளவு ஒரு ருசியான எல்லாருக்கும் பிடிக்கக்கூடிய சிக்கன் ரோல் வீட்டிலேயே எப்படி எளிமையா செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

சிக்கன் ரோல் | Chicken Roll Recipe In Tamil

சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னுநம்ம கடையில போய் எதுவும் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே அட்டகாசமானமுறையில் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடியகுழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன்ரோல் தான் செய்யப் போறோம் இந்த சிக்கன் ரோல் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Chicken Roll
Yield: 5
Calories: 354kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1/4 கிலோ சிக்கன்
 • 2 பெரிய வெங்காயம்
 • 1 டீஸ்பூன் சோம்பு
 • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1 டீஸ்பூன் கரம் மசாலா
 • 1 டீஸ்பூன் மல்லிதூள்
 • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
 • 1 கப் மைதா மாவு
 • 1 முட்டை
 • 1/2 கப் பிரட் தூள்
 • 1 டீஸ்பூன் மிளகு தூள்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • ஒரு குக்கரில் சிக்கன்னை சேர்த்து அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில்என்னை சேர்த்து சோம்பு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
 • இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரை டீஸ்பூன் மிளகு தூள்சேர்த்து வதக்கியும் வேக வைத்துள்ள சிக்கனை நன்றாக சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
 • அனைத்தும் சேர்ந்து வந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
 • ஒரு மிக்ஸி ஜாரில் மைதா மாவு முட்டை சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்துஎடுத்துக் கொள்ளவும்
 •  
  ஒரு தோசை கல்லில் கலந்து வைத்துள்ள மாவை லேசாக தோசை பதத்திற்கு ஊற்றி இரு பக்கமும் வேக வைத்துஎடுக்கவும்
 • ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவுடன் தண்ணீர் கலந்து வைக்கவும்
 • சுட்டு வைத்துள்ளதோசைகள் சிக்கன் கலவையை சேர்த்து மைதா மாவில் உதவியுடன் அதனை முழுவதுமாக ஒட்டி எடுத்து மறுபடியும் மைதா மாவில் முக்கி பிரட் தூள் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துஎடுத்தால் சுவையான சிக்கன் ரோல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 3mg | Sodium: 124mg | Potassium: 398mg | Calcium: 398mg

இதையும் படியுங்கள் : மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

-விளம்பரம்-