Home சைவம் மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின்...

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இன்று ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த ஆந்திரா தக்காளி பப்பு.

-விளம்பரம்-

இது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க ஆந்திரா தக்காளி பப்பைவிட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது.

இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். பெரும்பாலும் ரசம், சாம்பார், கீரை, புளி குழம்பு, குருமா இதுபோன்ற குழம்பு வகைகள் தான் மாறிமாறி வீடுகளில் செய்யப்படுகிறது. இவற்றை சற்று வித்தியாசமான சுவையில் செய்ய வேண்டும் என்றால் ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பப்பு செய்து கொடுக்கலாம். பொதுவாக ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் தக்காளி பப்பு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

Print
4 from 1 vote

ஆந்திரா தக்காளி பப்பு | Andhra Tomato Pappu Recipe In Tamil

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இன்று ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த ஆந்திரா தக்காளி பப்பு. இது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Andhra Tomato Pappu
Yield: 4 People
Calories: 189kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் துவரம் பருப்பு
  • 8 பல் பூண்டு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 7 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பை நன்கு அலசி விட்டு குக்கரில் சேர்த்து அதனுடன் பூண்டு மற்றும் எண்ணெய் ஊற்றி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசிய வதக்கவும். பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் வேக வைத்துள்ள பருப்பை கொஞ்சம் மசித்து சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • பின் இது நன்கு கொதித்ததும் பெருங்காயத்தூள், நெய் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி பப்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 189kcal | Carbohydrates: 3.9g | Protein: 9g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 237mg | Fiber: 4.8g | Vitamin A: 83IU | Vitamin C: 127mg | Calcium: 26mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!