ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் வறுவல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். தென்னிந்திய உணவகங்களில் கொடி வெப்புடு அல்லது சிக்கன் வெப்புடு என்றும் அழைக்கப்படும், ஆந்திரா சிக்கன் வறுவல் காரம் விரும்பிகளுக்கு ஏற்ற உணவு. ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-

வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க ஆந்திரா சிக்கன் வறுவலை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். மொறு மொறு என வறுத்த சிக்கனை ரொட்டி, நாண் அல்லது சாதத்துடன் சிறிது எலும்பிச்சை சாறுடன் ஆனியன் ரிங்ஸ் மற்றும் பச்சை சட்னியுடன் சாப்பிட்டால் ஆகா மிகவும் சுவையாக இருக்கும். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

ஆந்திரா சிக்கன் வறுவல் | Andhra Chicken Varuval Recipe In Tamil

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் வறுவல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: andhra, Indian
Keyword: Andhra Chicken Varuval
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பெரிய வெங்காயம்
  • 1/2 கி சிக்கன்
  • 1 டீஸ்பூன் குறுமிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 கிராம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 7 வர ‌மிளகாய்
  • 4 காஷ்மீர் மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் சிக்கனுடன்‌ மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சீரகம், குறுமிளகு, பட்டை, மல்லி, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காஷ்மீர் மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் தயார். இது சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 128kcal | Carbohydrates: 13.9g | Protein: 26g | Fat: 2.7g | Sodium: 54mg | Potassium: 77.9mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 2.1mg

இதனையும் படியுங்கள் : காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க!