எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

- Advertisement -

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும்.

-விளம்பரம்-

ஆனால் மஞ்சூரியன் என்றால் காய்கறிகளால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் பேபி கார்ன் மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத பேபி கார்ன் இப்போது எந்த கடைகளில் பார்த்தாலும் மெனு கார்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மஞ்சூரியன் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே. பேபி கார்ன் நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது.

- Advertisement -

எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் கார்ன் தாராளமாக உண்ணலாம். பேபி கார்ன் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. இந்த பேபி கார்ன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும். இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.

Print
3 from 2 votes

பேபி கார்ன் மஞ்சூரியன் | Baby Corn Manchurian Recipe In Tamil

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். பேபி கார்ன் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. இந்த பேபி கார்ன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Baby Corn Manchurian
Yield: 3 People
Calories: 88kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 250 கி பேபி கார்ன்
  • 1/4 கப் மைதா மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 3 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 2 பச்சை மிளகாய்
  • வெங்காயத்தாள் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பேபி கார்னை குக்கரில் சேர்த்து ஒரு விசில் விட்டு பின் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதில் நறுக்கி வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • பின் சிறிதளவு கார்ன் ஃபிளார் மாவை எடுத்து சிறிதளவு தண்ணீரில் ஊற்றி நன்கு கரைத்து ஊற்றவும்.
  • இது சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் வெங்காயத்தாள், பொரித்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூடான, சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 88kcal | Carbohydrates: 1.9g | Protein: 9.6g | Fat: 1.4g | Saturated Fat: 0.7g | Potassium: 287mg | Vitamin A: 214IU | Vitamin C: 25mg | Calcium: 10mg | Iron: 2.7mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் முட்டைகோஸ் மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்கள்!