- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும். ஆனால் மஞ்சூரியன் என்றால் காய்கறிகளால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் முட்டைக்கோஸ் மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத முட்டைக்கோஸ் மஞ்சூரியன் இப்பொது எந்த கடைகளில் பார்த்தாலும் மெனு கார்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மஞ்சூரியன் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே முட்டைக்கோஸ் மஞ்சூரியன். முட்டைக்கோஸ் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியனை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.
இந்த முட்டைக்கோஸில் கால்சியம் சத்து நிறையவே இருக்குது. நம்ம உணவில் அடிக்கடி கால்சியம் உள்ள முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு அது ரொம்பவே நன்மையை கொடுக்கின்றது. பெரியவர்கள் தொடங்கி வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் முதற்கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றால் விரும்பி கேட்பது மஞ்சூரியன் தான். இதன் ருசி அவ்வளவு பிரியம் அனைவருக்கும். இதனை எளிதாக நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்றே செய்து பாருங்கள்! இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.
இதனையும் படியுங்கள் : மொறு மொறு ருசியான முட்டைகோஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!
Ingredients
Method
முதலில் முட்டைக்கோஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் மிளகாய்த்தூள், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், குடை மிளகாய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் செஸ்வான் சாஸ், கார்ன் ப்ளவர் மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் பொரித்து வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து, இறுதியாக சிறிதளவு வெங்காயத்தாளை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியன் தயார்.






