மொறு மொறு ருசியான முட்டைகோஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!

- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம்.முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும். இப்படி முட்டைகோஸ் சேர்த்து பக்கோடா செய்தால் இது சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். உங்களுடைய வீட்டில் பஜ்ஜி மாவு இருந்தால் கூட அந்த மாவை இந்த பக்கோடாவில் தேவையான அளவு சேர்த்து பிசைந்து செய்யலாம். சுவையாகத்தான் இருக்கும்.

-விளம்பரம்-

மாலை நேரங்களில் குழந்தைகள் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நேரங்களில் கடைகளில் விற்கும் ஆரோக்கியம் மற்ற ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலே ஆரோக்கியமான முறையில் ஹெல்தியான இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.காய்கறி சேர்த்த ஸ்நாக்ஸ் என்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியாகவும் இருக்கும். வாங்க இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -
Print
No ratings yet

முட்டைகோஸ் பக்கோடா | Cabbage Pakoda Recipe In Tamil

மாலை நேரங்களில் குழந்தைகள் ஏதாவது ஸ்நாக்ஸ்செய்து கொடுக்க சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நேரங்களில் கடைகளில்விற்கும் ஆரோக்கியம் மற்ற ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலே ஆரோக்கியமானமுறையில் ஹெல்தியான இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.காய்கறி சேர்த்த ஸ்நாக்ஸ் என்பதால்உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியாகவும் இருக்கும். . இப்படி முட்டைகோஸ் சேர்த்துபக்கோடா செய்தால் இது சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும்வாங்க இந்த ரெசிபியை நாமும்தெரிந்து கொள்வோமா.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Cabbage Pakoda
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

செய்முறை

  • முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் –1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்புதேவையான அளவு, வெண்ணெய் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்துஉங்கள் கையை கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். (உங்களுடைய வீட்டில்வெண்ணெய் இல்லை என்றால் சுடச்சுட எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.)
  • முட்டைக்கோஸில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும்.அதன் பின்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப் இந்தபொருட்களை சேர்த்து மீண்டும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அழுத்தம் கொடுத்து நன்றாக பிசையுங்கள்.
     
  • முட்டைக்கோஸ் வெங்காயத்தில் இருந்தே தண்ணீர்விடத் தொடங்கும். இதுவே உங்களுக்கு பக்கோடா மாவு பக்குவத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால்2 ஸ்பூன் அளவு தண்ணீரை தெளித்து அழுத்தமாக பிசைந்தால் பக்கோடா மாவு தயார்.
  • மாவை தண்ணீர் ஊற்றி தளதளவென பிசைந்து விடக்கூடாது.கட்டி ஆகத்தான் இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள்.
     
  • எண்ணெயை மிதமாக சூடு ஆன பின்பு, இந்த மாவைகிள்ளி கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறம் வரும்வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Sodium: 13mg | Potassium: 381mg | Fiber: 4g | Calcium: 1mg