- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இப்போதும் கிராமப்புறங்களில் வாடிக்கையாக இருக்கும் வெந்தயக்களி செய்வதற்கு மிக எளிதான, அதே நேரம் ஆரோக்கியமான உணவு. வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் உடலின் வெப்பத்தை குறைக்க, கேச ஆரோக்கியம் மேம்பட எனப் பல நன்மைகளைத் தரக்கூடியது. அடிக்கடி வெந்தயக் களி செய்து சாப்பிடுவது ஆரோக்கிய உணவாக இருக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் இந்த வெந்தயக்களியை வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். உடல் சூட்டை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய, ரத்த ஓட்டத்தை சீராக்க கூடிய வெந்தயக்களியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க ருசியான வெந்தய கீரை பருப்பு கடையல் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
முதலில் வெந்தயம், உளுந்து, இட்லி அரிசி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு தனித்தனியாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அரிசி மற்றும் ஏலக்காய் சேர்த்து தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பட்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள அரிசி மாவு, உளுந்தை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.
களி சற்று சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தய களி தயார். இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.






