Home சைவம் மணக்க மணக்க ருசியான வெந்தய கீரை பருப்பு கடையல் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே...

மணக்க மணக்க ருசியான வெந்தய கீரை பருப்பு கடையல் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயக் கீரை. ஆம், இந்த கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக வெந்தயக் கீரை இருக்கிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும்.

-விளம்பரம்-

வெந்தயக் கீரையை சாப்பிட்டாலே பாதி நோய்கள் பறந்து போய்விடுமாம். அந்த அளவுக்கு ஆரோக்கியமானது, சத்தானது, மலிவானது. அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதது..!! ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சூட்டை குறைத்து, தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் ஆண்மை பலப்பட ஆண்கள் அடிக்கடி வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம்.

தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான கடையல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் வெந்தயக் கீரையை கொண்டு கடையல் செய்தால் சூப்பராக இருக்கும்.

Print
2.50 from 2 votes

வெந்தய கீரை பருப்பு கடையல் | Vendhaya Keerai Paruppu Kadayal Recipe In Tamil

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயக் கீரை. ஆம், இந்த கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக வெந்தயக் கீரை இருக்கிறது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம். தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான கடையல் செய்து சுவையுங்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Vendhaya Keerai Paruppu Kadayal
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு வெந்தயக் கீரை
  • 1 கப் துவரம் பருப்பு
  • 3 தக்காளி
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 4 வர ‌மிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் துவரம்பருப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் குக்கரில் சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வேகவைத்து கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் வேகவைத்த பருப்பு மற்றும் கீரை சேர்த்து அதனுடன் உப்பு, சாம்பார் பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • அவ்வளவுதான் வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியான ஆரோக்கியமான வெந்தய கீரை பருப்பு கடையல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 75kcal | Carbohydrates: 4.5g | Protein: 9.9g | Fat: 4.8g | Sodium: 21mg | Potassium: 60mg | Fiber: 2.52g | Vitamin A: 14IU | Vitamin C: 119mg | Calcium: 110mg | Iron: 5.9mg

இதனையும் படியுங்கள் : வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்