Home சைவம் வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்

வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்

பராத்தா அப்படின்னு  அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்த பராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும்.  ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல  ஏதாவது ஒரு அசைவ பொருளை  சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டு சமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே பிடித்த உணவுகளில் முதல் இடத்தில் வரும். அப்படி பராத்தாகளில் பல வகை பராத்தாகள் இருக்கு.

-விளம்பரம்-

இப்படி பராத்தாக்களில் பல வகைகள் இருந்தாலும் இப்ப நம்ம செய்ய போறது நம்ம எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச பராத்தா. இந்த மேத்தி பராத்தா  ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான இந்த பராத்தாவை எப்படி செய்யறது அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பராத்தால நம்ம என்ன வெஜிடபிள் யூஸ் பண்ணி பண்ண போறோம் அப்படின்னா வெந்தயக்கீரை. 

மேத்தி அப்படினா வெந்தயக்கீரை. இந்த வெந்தயக்கீரை பராத்தா எப்படி ருசியா சுவையா செய்றது அப்படிங்கிறத பார்க்கலாம். இந்த சுவையான பராத்தாவ செய்து சாப்பிட குடுத்தா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குடும்பத்துல இருக்க எல்லாருக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் இதுல வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் போது அதோடு சுவை இன்னுமே அதிகமா இருக்கும். அதனால இந்த வெந்தயக்கீரை பராத்தாவை நம்ம எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

மேத்தி பராத்தா | Methi Paratha Recipe In Tamil

மேத்தி அப்படினா வெந்தயக்கீரை. இந்த வெந்தயக்கீரை பராத்தா எப்படி ருசியா சுவையா செய்றது அப்படிங்கிறதபார்க்கலாம். இந்த சுவையான பராத்தாவ செய்து சாப்பிட குடுத்தா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.குடும்பத்துல இருக்க எல்லாருக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் இதுல வெந்தயக்கீரைசேர்த்து செய்யும் போது அதோடு சுவை இன்னுமே அதிகமா இருக்கும். அதனால இந்த வெந்தயக்கீரைபராத்தாவை நம்ம எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Methi Paratha
Yield: 4
Calories: 207kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கட்டு வெந்தயக் கீரை
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் கர மசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் சீரக தூள்
  • 1/4 ஸ்பூன் ஓமம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெந்தயக்கீரை சுத்தம் செய்து  எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையில்  மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின்பு கோதுமை மாவில் அந்த வெந்தயக்கீரை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரி தேய்ககும் கல்லில்  சப்பாத்திகளாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு அடுப்பி ல் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி  தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசை கல்லில் சேர்த்து மேலே லேசாக என்னை தடவி ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்படி அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • எல்லாருக்கும் பிடித்த சுவையான சுலபமான மேத்தி பரோட்டா தயார். சூடாக பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 37.7g | Protein: 4.8g | Fat: 4g | Calcium: 115mg | Iron: 2.4mg

இதையும் படியுங்கள் : ருசியான வட இந்திய ஸ்பெஷல் ஆலு பராத்தா இப்படி செஞ்சி பாருங்க!இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!