சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

- Advertisement -

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய உணவு அப்படின்னு கூட சொல்ல அதுவும் 90களின் கால கட்டங்களில் எங்களோட மாலை நேர சிற்றுண்டி அதிக நாள் இந்த நீர்ருண்டை அப்படிங்கற உணவு இருந்திருக்கு. இந்த நீர் உருண்டைக்கு எப்பவுமே அரிசி ஊறவைத்து அரைச்சு அதில் உருண்டை செய்து அதுக்கப்புறம்தான் வேக வைத்து எடுப்பாங்க. ஆனால் இப்போ நம்ம செய்ய போறது அரிசி உப்புமால நீர் உருண்டை . அரிசி உப்புமாவே எங்களுக்கு பிடிக்காது இதுல நீர்ருண்டை வேற சொல்றீங்க. நான் ரொம்ப சுவையான அரிசி உப்புமா ல செய்யக்கூடிய இந்த நீருண்டை ரொம்ப குழந்தைகள் எல்லாரும் பிடிக்கும் இந்த நீர் உருண்டை.

-விளம்பரம்-

அரிசி உப்புமா அப்படிங்கும் போது நம்ம பச்சரிசியை காயவைத்து நொய் மாதிரி உடச்சு எடுத்துக்கிட்டு அதுல செய்யக்கூடியது தான். நொய் அப்படிங்கறது ரொம்ப நாளைக்கு முன்னாடியே மறைந்து போன ஒரு வார்த்தையா மாறிடுச்சு காரணம் நொய்யி அப்படிங்கிறது நெல்லில் இருந்து அரிசி அரைக்கும் போதே நமக்கு கிடைக்க கூடிய அரிசிகளோட சின்ன சின்ன துகள்கள் தான் நம்ம நொய் அப்படின்னு சொல்லுவோம். வீட்ல நொய் இருக்கிறவங்க அப்படியே செய்வாங்க இல்லாதவங்க பச்சரிசியும் நல்லா கழுவி காய வச்சிட்டு மிக்ஸியில் இடிச்சு கொரகொரப்பா எடுத்துட்டு அதுல இந்த உப்புமா செய்வாங்க. நம்ம இப்படி அதுல உப்புமா செய்து அதை நீர் உருண்டையா மாத்தி சாப்பிட போறோம் .

- Advertisement -

இந்த நீர் உருண்டை ரொம்பவே சுவையா இருக்கும் இது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த நீர் உருண்டையில எந்த ஒரு கெட்டதுமே கிடையாது ஆரோக்கியமா இருக்கும். சிலருக்கு இந்த நீர் உருண்டையை சாம்பார் கூட சேர்த்து வைத்து சாப்பிட ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான நீர் உருண்டையை எப்படி ஈஸியா வீட்ல செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

அரிசி உப்புமா நீருண்டை | Rice upuma neerurrundai recipe in tamil

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய உணவு அப்படின்னு கூட சொல்ல அதுவும் 90களின் கால கட்டங்களில் எங்களோட மாலை நேர சிற்றுண்டி அதிக நாள் இந்த நீர்ருண்டை அப்படிங்கற உணவு இருந்திருக்கு. இந்த நீர் உருண்டைக்கு எப்பவுமே அரிசி ஊறவைத்து அரைச்சு அதில் உருண்டை செய்து அதுக்கப்புறம்தான் வேக வைத்து எடுப்பாங்க. ஆனால் இப்போ நம்ம செய்ய போறது அரிசி உப்புமால நீர் உருண்டை . அரிசி உப்புமாவே எங்களுக்கு பிடிக்காது இதுல நீர்ருண்டை வேற சொல்றீங்க. நான் ரொம்ப சுவையான அரிசி உப்புமா ல செய்யக்கூடிய இந்த நீருண்டை ரொம்ப குழந்தைகள் எல்லாரும் பிடிக்கும் இந்த நீர் உருண்டை.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: அவுள் உருண்டை, பால் ரவா உருண்டை, பொறி உருண்டை, மாவு உருண்டை
Yield: 10 People
Calories: 150kcal
Cost: 50

Equipment

 • 1 இட்லி பாத்திரம்
 • 1 கடாய்
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 1 கப் உடைத்த பச்சரிசி
 • 1 ஸ்பூன் கடுகு
 • 1 ஸ்பூன் உளுந்து
 • 1 கப் தேங்காய் துருவல்
 • 2 காய்ந்த மிளகாய்
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • எண்ணெய் தேவையான அளவு
 • தேவையான அளவு உப்பு           

செய்முறை

 • உடைத்த பச்சரிசி என்பது பச்சரிசியை கழுவி காயவைத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும் பவுடராக பொடிக்க கூடாது கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
 • பிறகு அதில் உப்புமா செய்வதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் உடைத்து வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து நன்றாக கலந்து விடவும் தண்ணீர் அளவு கம்மியாக இருந்தால் உப்புமா சற்று கெட்டியாக வரும்.
 • உப்புமாவை நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும்.
 • உப்புமா கை பொறுக்கும் சூடிற்கு வந்த பிறகு அவைகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான அரிசி உப்புமா நீர் உருண்டை தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 28g | Protein: 6g | Fat: 5g