Home ஸ்நாக்ஸ் மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி...

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த பிரெட் ரோல். மாலை நேரம் சிற்றுண்டிக்கு வீட்டில் எதுவுமே செய்யறதுக்கு இல்ல வெறும் பிரெட்டும் முட்டை தான் இருக்கு அப்படின்னா கூட ஒரு சீஸ் சேர்த்து சூப்பரா பிரெட் வச்சு ஒரு ரோல் பண்ணிடலாம். அந்த ரோல் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சுவையான ஈஸி பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அது மட்டும் இல்லாம இந்த பிரெட் ரோல் உள்ள நம்ம சீஸ் யூஸ் பண்ணி பண்றதுனால ரொம்ப சுவையா இருக்கும். அது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் சாதரணமாகவே ரோல் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் எல்லாருக்கும் சாப்பிடறதுக்குமே ரொம்ப பிடிக்கும்.

இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்பவே ஈசியா செய்திடலாம் . ரொம்ப சிம்பிளா நாலே நாலு பொருளை வைத்து நச்சுன்னு ஒரு பிரெட் ரோல் செய்து கொடுத்தோம்னு சும்மா அட்டகாசமா இருக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆயிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சாதாரணமா பாதி தான் சாப்பிடுவாங்க அப்படின்னா இன்னைக்கு எக்ஸ்ட்ராவா ஒன்று சேர்த்து இரண்டு பிரெட் ரோலா சாப்பிடுற அளவுக்கு இதோட சுவை அவ்ளோ அட்டகாசமா இருக்கும். சரி வாங்க சுவையான ஈஸி பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.


Print
4.50 from 2 votes

ஈஸி பிரெட் ரோல் | Easy bread roll recipe in tamil

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த பிரெட் ரோல். மாலை நேரம் சிற்றுண்டிக்கு வீட்டில் எதுவுமே செய்யறதுக்கு இல்ல வெறும் பிரெட்டும் முட்டை தான் இருக்கு அப்படின்னா கூட ஒரு சீஸ் சேர்த்து சூப்பரா பிரெட் வச்சு ஒரு ரோல் பண்ணிடலாம். அந்த ரோல் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும். இந்த சுவையான ஈஸி பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அது மட்டும் இல்லாம இந்த பிரெட் ரோல் உள்ள நம்ம சீஸ் யூஸ் பண்ணி பண்றதுனால ரொம்ப சுவையா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Coriander Rolls, egg roll, mushroom roll, veg roll, Wafer Rolls
Yield: 7 People
Calories: 153kcal
Cost: 75

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 10 பிரெட்
  • 2 முட்டை
  • 1 பாக்கெட் சீஸ்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நாம் வைத்திருக்கும் பிரெட்டை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி தேய்ப்பது போல பிரெட்டை லேசாக அழுத்தி தேய்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு தேய்த்து வைத்துள்ள பிரெட் மீது சீஸ் சிலைஸ்களை வைத்து பிரெட்டை ஒரு ரோலாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ரோல்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.
  • ரோல் செய்து வைத்துள்ள பிரெட்டுகளை அடித்து வைத்துள்ள முட்டையில் நன்றாக படுமாறு பிரட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
  • நன்றாக முழுவதும் ரோல்கள் பொரிந்த வெந்த பிறகு சூடாக பரிமாறினால் சுவையான ஈஸி பிரெட் ரோல் தயார்.

Nutrition

Calories: 153kcal | Carbohydrates: 19g | Protein: 10g | Fat: 20g