ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒவ்வொரு முறைப்படி திருமணம் செய்யும்போது அந்த திருமணத்தில் நிறைய சடங்குகள் இருக்கும் ஆனால் அனைத்து முறையான திருமணங்களிலும் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுவது வழக்கமாகவே இருக்கும். அந்த வகையில் திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
திருமணம் என்றாலே மகிழ்ச்சியாகவும் வீட்டில் உறவினர்களுக்கு அமர்க்களம் ஆகும் ஒரே ஆர்ப்பாட்டமாகவும் தான் இருக்கும் வீடு முழுவதும் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் வீடு சந்தோஷத்தை நிறைந்திருக்கும். திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளிலிருந்து திருமணம் முடிக்கும் கூட நிறைய சடங்குகள் இருக்கும் இந்த சடங்குகளில் எல்லாம் மிகவும் முக்கியமான சடங்கு என்றால் அது முகூர்த்த கால் நடுவது தான்.
முகூர்த்தக்கால்

இந்து முறைப்படி திருமணம் செய்யும்போது சுப முகூர்த்த நாளில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நல்ல நேரத்தில் திருமணத்திற்கு ஐந்து நாட்கள் ஏழு நாட்கள் மூன்று நாட்கள் என ஒற்றைப்படை நாட்களுக்கு முன்பாக வீட்டில் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் முகூர்த்தக்கால் நட்டு வீட்டில் பந்தல் போடுவார்கள். மணமகன் மற்றும் மணமகள் இருவருடைய வீடுகளிலும் குறிப்பாக வடகிழக்கு பகுதியில் தான் இந்த முகூர்த்த கால் நட வேண்டும். ஆனால் எதற்காக நாம் முகூர்த்த கால் நடுகிறோம் என்பது பலருக்கு தெரியாது அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முகூர்த்த கால் நடுவதற்கான காரணம்

நம் முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்து திருமணத்திற்காக பின்பற்றி வழிமுறைகளை தான் நாமும் இன்று பின்பற்றி வருகிறோம் அந்த வகையில் இந்த முகூர்த்த கால் நடுவதற்கான காரணம் என்னவென்றால், இந்து முறைப்படி திருமணத்தில் முகூர்த்த கால் நடுவது மாவிலை தோரணம் கட்டுவது என பலவிதமான சடங்குகள் இருக்கும். வந்த கால் நடுவதற்காக மூன்றில் கம்புகளை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பூக்கள் வைத்து அலங்கரித்து வடகிழக்கு திசையில் மூலையில் தான் நட வேண்டும். வட கிழக்கு மூளை ஈசானிய திசை என்பதால் தெய்வத்தின் அருளோடு திருமணம் நடக்க வேண்டும் மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே குறிப்பாக வடகிழக்கு திசையில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
முகூர்த்த கால் நடும் முறை தோன்றிய வரலாறு
300 காலகட்டத்தில் ஒரு நாட்டில் நடக்கும் திருமணத்தின் போது அந்த நாட்டின் அரசனுக்கு மரியாதை செய்யும் விதமாக திருமண அழைப்பிதழ் ஆனால் அப்படி நிறைய அழைப்புகள் வந்தால் அரசரால் அந்த அனைத்து திருமணங்களுக்கும் செல்ல முடியாது அல்லவா எனவே அரசரால் நேரில் சென்று வாழ்த்த முடியாத திருமணங்களுக்கு அவர் ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அணி கோல் என்பது நாளடைவில் மறதி அரசாணைக்கால் என்று ஆனது. அந்த ஆணிக்கால் வந்துவிட்டாலே அரசு நாளாக திருமணம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று நினைத்து மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்துவார்கள். அந்த வகையில் ஒரு திருமணம் அங்கீகரிக்கப்பட்டது என்பதை குறிக்கும் விதமாக தான் முகூர்த்த வழக்கம் இந்துக்களின் முறைப்படி கொண்டாடப்படுகிறது.
நலங்கு
திருமணத்திற்காக ஒரு வீட்டில் முகூர்த்த கால் நடும் விழா முடிந்த பிறகு அந்த வீட்டில் உள்ள மணமகன் மற்றும் மணமகளுக்கு திருமணத்திற்கு முன்பாக ஒற்றைப்படை நாட்கள் கணக்கு வைத்து நலங்கு வைக்கும் விழா நடைபெறும். இதன் நலங்கு வைக்கும் விழா ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு வழக்கப்படியும் மாறுபடும். ஒரு சிலர் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாட்களில் இருந்து வீட்டில் அசைவம் உண்ணாமல் வெளியிலும் அசைவம் இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலர் முகூர்த்த கால் நட்டதிலிருந்து அசைவம் உண்ணாமல் இருப்பார்கள். அதேபோல் வீட்டில் திருமணம் நிச்சயக்கப்பட்ட பிறகு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் யாரும் திருமணம் முடிக்கும் வரை எந்த ஒரு துக்கத்திலும் கலந்து கொள்ளக்கூடாது.
இதனையும் படியுங்கள் : கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்





