Home அசைவம் காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும் அந்த அளவுக்கு சிக்கன் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சமான ஒரு நான்வெஜ் அப்படின்னு சொல்லலாம். இந்த சிக்கன்ல மட்டும் நம்ம என்ன செஞ்சாலும் எல்லாமே சூப்பரா தான் வரும் சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் பிரை, சிக்கன் பெப்பர் மசாலா சிக்கன் சுக்கா அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய எல்லாமே ரொம்ப டேஸ்டாவும் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் .

-விளம்பரம்-

கடையில் கிடைக்கிற சிக்கன் மசாலா தான் வாங்கி செய்வோம் ஆனா அந்த மாதிரி எதுவுமே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிரெஷா அரைச்சு செய்ற ஒரு மசாலா வச்சு சூப்பரான சிக்கன் லெக் ஃப்ரை தான் செய்யப் போறோம். பொதுவாக சிக்கன் லெக் பீஸ் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணில சிக்கன் லெக் பீஸ் இல்லன்னா எல்லாரும் பயங்கர கடுப்பாகிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு எமோஷன் தான் இந்த லெக் பீஸ்.

இந்த சிக்கன் லெக் பீஸ் கடைகள்ல வாங்கி கழுவி சுத்தம் செய்து பிரெஷா அரைச்சு வச்ச மசாலா போட்டு வைக்கும் போது ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். இந்த காரசாரமான வித்தியாசமான சிக்கன் லெக் ப்ரை நீங்களும் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதை ஏதாவது ஒரு சாப்பாட்டுக்கு சைடிஷா மட்டும் இல்லாம சும்மாவே ஈவினிங் ஸ்நாக்ஸாவே நீங்க செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சுவையில் இருக்கக்கூடிய சிக்கன் லெக் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

சிக்கன் லெக் ஃப்ரை | Chicken Leg Fry Recipe In Tamil

கடையில் கிடைக்கிறசிக்கன் மசாலா தான் வாங்கி செய்வோம் ஆனா அந்த மாதிரி எதுவுமே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயேபிரெஷா அரைச்சு செய்ற ஒரு மசாலா வச்சு சூப்பரான சிக்கன் லெக் ஃப்ரை தான் செய்யப் போறோம்.பொதுவாக சிக்கன் லெக் பீஸ் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணிலசிக்கன் லெக் பீஸ் இல்லன்னா எல்லாரும் பயங்கர கடுப்பாகிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு எமோஷன்தான் இந்த லெக் பீஸ். ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதை ஏதாவது ஒரு சாப்பாட்டுக்குசைடிஷா மட்டும் இல்லாம சும்மாவே ஈவினிங் ஸ்நாக்ஸாவே நீங்க செஞ்சு சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: Fry, starters
Cuisine: tamil nadu
Keyword: chicken leg fry
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன் லெக் பீஸ்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கன் லெக் பீஸை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சோம்பு, சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  • கழுவி வைத்துள்ள சிக்கன் லெக் பீஸில் அரைத்த மசாலாவை சேர்த்து அரிசி மாவு சோள மாவு எலுமிச்சை சாறு தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
     
  • நன்றாக ஊறிய பிறகு சூடான எண்ணெயில் சிக்கன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் அதனுடன் அதே எண்ணெயில்கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வறுத்து சிக்கன் லெக் பீஸ் உடன் சேர்த்துக்கொண்டால் சுவையான காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 350kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 380mg | Calcium: 12mg