மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். என்னதான் சிக்கன் மீன் நண்டு கணவாய் அப்படின்னு எக்கச்சக்கமான நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலும் மட்டன் அப்படின்னாலே அது ஒரு தனி ஸ்பெஷல் என்று சொல்லலாம். வீட்ல மட்டன் எடுத்தாலே ஒரே ஆனந்தமா இருக்கும். மட்டன் வச்சு செய்யக்கூடிய என்ன ஐட்டமா இருந்தாலும் அதை நிறைய பேரு விரும்பி சாப்பிடுவாங்க.
அந்த வகையில இன்னைக்கு நாம மட்டன் வச்சு செய்யக்கூடிய ரொம்ப சிம்பிளான மட்டன் மிளகு பிரட்டல் தான் பார்க்க போறோம். இந்த மட்டன் மிளகு பிரட்டல் செய்து அதை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் சொர்க்கமா இருக்கும் அந்த அளவுக்கு சூப்பரான சுவையில இந்த மட்டன் மிளகு பிரட்டல் இருக்கும்.
இந்த மட்டன் மிளகு பிரட்டல் சூடு சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை சப்பாத்தி பூரி அப்படின்னா எல்லாத்துக்கும் சைடிஷா வைத்து சாப்பிடலாம் ரொம்ப டேஸ்டா இருக்கும். அது மட்டும் இல்லாம நாண் பரோட்டா இதுக்கும் கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்யக்கூடிய இந்த மட்டன் மிளகு பிரட்டல் சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இத செஞ்சு கொடுங்க. எப்பவும் ஒரே மாதிரியா மட்டன் சுக்கா மட்டன் வருவல் அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான மட்டன் மிளகு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
மட்டன் மிளகு பிரட்டல் | Mutton Pepper stir fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மட்டன்
- 3 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு குக்கரில் மட்டுமே கழுவி சேர்த்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து அதனை எண் ஒன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்
- மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்
- அதன் பிறகு மட்டன் நன்றாக மசாலாவுடன் சேர்ந்து வெந்தவுடன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் மிளகு பிரட்டல் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!