எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

- Advertisement -

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டன் கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

-விளம்பரம்-

இந்த சமையல் குறிப்பு பதிவில் மட்டனை ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில் செய்யலாம்.மட்டன்  என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஆந்திரா ஸ்டைலில் மட்டன் கிரேவி  செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக  சாதத்திற்கு இதை போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

- Advertisement -

எல்லா புலாவ் , பிரியாணிக்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி  இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். இதை ஒருமுறை நீங்கள் செய்து  சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.

Print
3.34 from 3 votes

ஆந்திரா மட்டன் கிரேவி | Andhra Mutton Gravy Recipe In Tamil

மட்டன்  என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள்.அதிலும் ஆந்திரா ஸ்டைலில் மட்டன் கிரேவி  செய்துகொடுத்தால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக  சாதத்திற்குஇதை போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.எல்லா புலாவ் , பிரியாணிக்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி  இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். இதை ஒருமுறைநீங்கள் செய்து  சுவைத்து விட்டால் வாரத்தில்ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: curry
Cuisine: tamilnadu
Keyword: Andhra Mutton Gravy
Yield: 3
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன் 
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பெரியது வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரியது தக்காளி
  • 1/2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை
  • 10 இலை கருவேப்பலை

வறுத்துஅரைத்து கொள்ள வேண்டியவைகள் (தூள்) :

  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 2 பட்டை
  • 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் சிறுஞ்சீரகம்

செய்முறை

  • குக்கரில் தண்ணீருடன் மட்டன், உப்பு (தேவையான அளவு) மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டன் வேக வைக்கவும்.
  • வேகவைத்த தண்ணீரை பத்திர படுத்தி வைத்துகொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய்,மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் (1 டீஸ்பூன் மட்டும்) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்கவும்.
  • உப்பு மற்றும் அரைத்து வைத்தவைகளை சேர்த்து மிதுவான வெப்பத்தில் 5 நிமிடம் வதக்கவும். மட்டன் வேகவைத்த தண்ணீரை (கிரேவிக்கு தேவையான அளவு) சேர்த்து மிதுவான வெப்பத்தில் நன்கு கொதிக்க விடவும். நன்கு கிரேவி ஆனா பிறகு மீதம் உள்ள மிளகு தூள் (1 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இறக்கிய பின்னர் மேலே சிறிது கொத்தமல்லி தழையை தூவினால்… சுவையான.. மணமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.

செய்முறை குறிப்புகள்

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g