காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

- Advertisement -

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன் சப்பாத்திய சேர்த்து ஒரு ரோல் செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும். அந்த ஒரு முயற்சி தான் இப்போ சப்பாத்தி சிக்கன் ரோல் வீட்ல எப்படி சுலபமாக செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த சுவையான சப்பாத்தி சிக்கன் ரோல் முக்கியமா குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

-விளம்பரம்-

அவங்களோட மாலை நேரம் சிற்றுண்டிக்கு நீங்க சிக்கன் சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தீர்கள் என்றால் போதும் அவ்வளவுதான் குழந்தைகள் ரொம்பவே குஷி ஆயிடுவாங்க. அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த சிக்கன் சப்பாத்தி ரோல். அப்படி இல்லையா காலையில செய்த சப்பாத்தியும் மதியானம் செய்த சிக்கன் ஃப்ரை மீந்து போயிடுச்சு அப்படின்னா கவலைப்படுறீங்களா ஒன்னும் பிரச்சனை இல்ல ஈவினிங் இந்த மாதிரி சூப்பரான சிக்கன் சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து சும்மா அசத்துங்க. அவங்களுக்கு மீந்து போன சப்பாத்தி தெரியாது மீதம் வச்ச சிக்கன் பிரையும் தெரியாது.

- Advertisement -

புதிதாகவும் செய்யலாம் இல்லை மீதமானதிலும் எப்படி செய்யலாம் ஒரே பதிவில் பார்க்க இருக்கோம். ரொம்பவே சுலபம்தான் இந்த சிக்கன் சப்பாத்தி ரோல் ரொம்ப ஈஸியா செய்து முடிச்சுடலாம் அது மட்டும் இல்லாம இதெல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு உணவா இருக்கும். நம்மளோட முதல் திருப்தியே சாப்பாடு பொருத்தவரைக்கும் நம் உடன் இருக்கிற குடும்பத்தார திருப்திப்படுத்துவது தான். அதுலயும் குழந்தைகளை திருப்திப்படுத்தனும் அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே ஒரு பெரிய விஷயமா இருக்கு. அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த மாதிரி சிக்கன் சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தால் சும்மா சூப்பரா இருக்கும்.

Print
2.50 from 4 votes

சிக்கன் சப்பாத்தி ரோல் | Chicken Chappathi Roll in Tamil

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன் சப்பாத்திய சேர்த்து ஒரு ரோல் செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும். அந்த ஒரு முயற்சி தான் இப்போ சப்பாத்தி சிக்கன் ரோல் வீட்ல எப்படி சுலபமாக செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த சுவையான சப்பாத்தி சிக்கன் ரோல் முக்கியமா குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்களோட மாலை நேரம் சிற்றுண்டிக்கு நீங்க சிக்கன் சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தீர்கள் என்றால் போதும் அவ்வளவுதான் குழந்தைகள் ரொம்பவே குஷி ஆயிடுவாங்க. அந்த அளவுக்கு சுவையா இருக்கும்
Prep Time15 minutes
Active Time13 minutes
Total Time28 minutes
Course: evening, snacks
Cuisine: tamilnadu
Keyword: Chappathi Role, Coriander Rolls, egg roll, Wafer Rolls
Yield: 5 people
Calories: 150kcal
Cost: 100

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 5 சப்பாத்தி
  • 2 கப் சிக்கன் 65
  • 2 வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 வெள்ளரிக்காய்
  • தேவையான அளவு தக்காளி சாஸ்
  • தேவையான அளவு பச்சைமிளகாய் சாஸ்
  • சிறிதளவு உப்பு                             
  • சிறிதளவு எண்ணெய்

செய்முறை

  • அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சப்பாத்திகளை சூடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சிக்கன் 65 துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • டுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சற்றே பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் இவற்றைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் செய்து கலந்து விட்டு கொள்ள வேண்டும்.
  • இவைகள் நன்றாக வதங்கிய பிறகு அதில் சிக்கன் 65 துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு சுடு செய்து எடுத்து வைத்துள்ள சப்பாத்தி மேல் தக்காளி சாஸை தடவி அதில் கலந்து வைத்துள்ள சிக்கன் 65, வெங்காய, குடைமிளகாய் மசாலாவை வைத்து ரோலாக சப்பாத்தியை உருட்டி உண்ண கொடுத்தால் சுவையான சிக்கன் சப்பாத்தி ரோல் தயார்

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 14g | Protein: 25g | Fat: 15g