கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

- Advertisement -

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து செய்யக்கூடிய கடாய் சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கடாய் சிக்கன் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும் இத சப்பாத்தி பூரி இட்லி தோசை பரோட்டா அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

வீட்ல சிக்கன் எடுத்திருக்கீங்க ஆனா தக்காளி இல்ல அப்படின்னா கூட நீங்க இந்த கடாய் சுத்தன செய்யலாம் இதுக்கு தக்காளி எதுவுமே தேவையில்லை வீட்ல இருக்குற சில பொருட்கள் மட்டுமே போதும் மசாலாக்கள் எல்லாமே நிறைய சேர்த்து வைக்கிற இந்த கடாய் சிக்கன் டேஸ்ட்டு அடிச்சுக்கவே முடியாது நீங்க இதுவரைக்கும் சாப்பிட்டு பார்க்காத ஒரு சுவைல பட்டர் எல்லாம் சேர்த்து செய்றதால செம சூப்பரா ரிச்சா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப புடிக்கும். குறிப்பா வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இந்த ரெசிபியை செஞ்சு குடுங்க கண்டிப்பா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லெக் பீஸ்சா வாங்கி செஞ்சு கொடுத்தீங்கன்னா லெக் பீஸ் வச்சு குழந்தைகள் ஜாலியா விளையாடிகிட்டு சாப்பிடுவாங்க பொதுவாகவே குழந்தைகளுக்கு லெக் பீஸ் தான் ரொம்ப பிடிக்கும்.

அந்த வகையில இந்த கடாய் சிக்கன் குழந்தைகளுக்கு ரொம்ப ஃபேவரிட் ஆக மாறிடும் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் மசாலாக்கள் கம்மி பண்ணி காரம் குறைவா செஞ்சிக்கோங்க இல்ல பெரியவங்க மட்டும் தான் சாப்பிட போறீங்க அப்படின்னா நல்லா காரசாரமா செஞ்சீங்கன்னா இதோட டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் எதிர்பார்க்காத அளவுக்கு அவ்ளோ டேஸ்டா கிடைக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான கடாய் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கடாய் சிக்கன் | Kadai Chicken Recipe In Tamil

குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப புடிக்கும். குறிப்பாவீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இந்த ரெசிபியை செஞ்சுகுடுங்க கண்டிப்பா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லெக் பீஸ்சாவாங்கி செஞ்சு கொடுத்தீங்கன்னா லெக் பீஸ் வச்சு குழந்தைகள் ஜாலியா விளையாடிகிட்டு சாப்பிடுவாங்கபொதுவாகவே குழந்தைகளுக்கு லெக் பீஸ் தான் ரொம்ப பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kadai chicken
Yield: 6
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 3 பெரிய வெங்காயம்
  • 1 மஞ்சள் தூள்
  • 1 டீஸ்டீஸ்பூன் பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் பட்டர்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு சிக்கனையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்
  • அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கியபிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  • பிறகு அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாக வதக்கி இறுதியாக பச்சை மிளகாய் கீரியும் மல்லி இலைகள் தூவியும்சேர்த்து இறக்கினால் சுவையான கடாய் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Sodium: 12mg | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : ருசியான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு பிரியாணி செய்தாலும் காலியாகும்!

-விளம்பரம்-