ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

- Advertisement -

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் சிக்கனைக் கொண்டு மஞ்சூரியன் செய்யுங்கள். இந்த சிக்கன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும். அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது.

-விளம்பரம்-

சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய முறையில் சமைப்பவர்களும் உண்டு, மேற்கத்திய மற்றும் சீனா உணவு முறையில் சமைப்பவர்களும் உண்டு. நாம் இன்று பார்க்க இருப்பது சீன முறையில் தயார் செய்யப்படும் சிக்கன் மஞ்சூரியன் உணவாகும். பெரியவர்கள் தொடங்கி வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் முதற்கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றால் விரும்பி கேட்பது மஞ்சூரியன் தான். இதன் ருசி அவ்வளவு பிரியம் அனைவருக்கும். மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது.

- Advertisement -

சிக்கன் என்பது அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் அதில் எப்பொழுது குழம்பு மற்றும் சில்லி எனச் செய்து தான் சாப்பிடுவார்கள். அடுத்தாக சிக்கன் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு புதுவிதமான ரெசிபி செய்து சாப்பிடலாம். இந்த மஞ்சூரியன் காரமான, புளிப்பான சாஸ் கொண்டு செய்யப்படுகிறது. இது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பலரும் கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு உணவு தான் இந்த ரெசிபி. டேஸ்ட் அட்லஸ் எனும் ஆன்லைன் உணவு இதழ் பட்டியலிட்ட சிறந்த சைவ உணவுகளில் இந்தோ – சைனீஸ் உணவான மஞ்சூரியன் இடம்‌ பெற்றுள்ளது. இதனை நூடுல்ஸ் அல்லது ப்ரைட் ரைசுக்கு சைட் டிஷ்ஷாக வைக்கலாம். வீட்டிலேயே எளிதாக சிக்கன் மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சிக்கன் மஞ்சூரியன் | Chicken Manjurian Recipe In Tamil

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் சிக்கனைக் கொண்டு மஞ்சூரியன் செய்யுங்கள். இந்த சிக்கன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும். அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். பெரியவர்கள் தொடங்கி வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் முதற்கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றால் விரும்பி கேட்பது மஞ்சூரியன் தான். இதன் ருசி அவ்வளவு பிரியம் அனைவருக்கும். இதனை நூடுல்ஸ் அல்லது ப்ரைட் ரைசுக்கு சைட் டிஷ்ஷாக வைக்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening
Cuisine: Chinese
Keyword: Chicken Manchurian
Yield: 3 People
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி போன்லெஸ் சிக்கன்
  • 1 முட்டை
  • 5 டேபிள் ஸ்பூன் கார்ன் மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 டீஸ்பூன் இஞ்சி விழுது
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 குடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • வெங்காயத்தாள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • வினிகர் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் அஜினமோட்டோ

செய்முறை

  • சிக்கனை கழுவி சுத்தம் செய்து நீளத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கார்ன்ப்ளவர், மைதா, சோயா சாஸ், முட்டை, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பின் சிக்கனை சேர்ந்து கலந்து விட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் பச்சை மிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள், குடைமிளகாயை கழுவி, நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கார்ன் ப்ளவர் மாவை சேர்த்து தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி அதன் பிறகு சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினோமோட்டோ, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன் ப்ளவர் கலவையை ஊற்றி கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்.
  • அதன்பிறகு நாம் வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கி. பின்னர் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயத் தாள்‌ சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான சிக்கன் மஞ்சூரியன் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 128kcal | Carbohydrates: 3.9g | Protein: 26g | Fat: 2.7g | Sodium: 54.8mg | Potassium: 77.95mg | Vitamin A: 29IU | Vitamin C: 60.4mg | Calcium: 24.1mg | Iron: 1.21mg

இதனையும் படியுங்கள் : காரஞாரமான கோபி மஞ்சூரியன் மிக ஈஸியாக வீட்டில் செய்து அசத்தலாம் அதன் ரெசிபி இதோ!