Home சைவம் காரஞாரமான கோபி மஞ்சூரியன் மிக ஈஸியாக வீட்டில் செய்து அசத்தலாம் அதன் ரெசிபி இதோ!

காரஞாரமான கோபி மஞ்சூரியன் மிக ஈஸியாக வீட்டில் செய்து அசத்தலாம் அதன் ரெசிபி இதோ!

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது கோபி அதாவது காலிஃப்ளவர் மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே கோபி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.

-விளம்பரம்-

இந்த கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த கோபி மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம். இந்த காலிஃப்ளவர்ல கால்சியம் சத்து நிறையவே இருக்குது. நம்ம உணவுல அடிக்கடி கால்சியம் உள்ள   காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது  உடலுக்கு அது ரொம்பவே நன்மையை கொடுக்கின்றது.

கால்சியம் அதிகமாக இருக்கிறதுனால பற்கலுக்கும் எலும்புகளுக்கும் நல்ல வலிமைய கொடுக்கின்றது. மஞ்சூரியன் எப்போதும் சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான்  சாப்பிட்டு இருக்கோம்.  ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல காலிஃப்ளவர் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Print
No ratings yet

கோபி மஞ்சூரியன் | Gobi Manchurian Recipe In Tamil

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறையவெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது கோபி அதாவது காலிஃப்ளவர் மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே கோபி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish, starters
Cuisine: Gobi Manchurian
Keyword: Gobi Manchurian
Yield: 4
Calories: 253kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 4 ஸ்பூன் சோளமாவு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் சோயாசாஸ்
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு மொட்டுகளாக உடைத்து வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்
  •  பிறகு கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையில் 3 1/2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து அதில் சிறிதளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் மொட்டுக்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • அனைத்து காலிபிளவர் பூக்களையும் எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பிறகு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சோளமாக சேர்த்து அதில் நீர் விட்டு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். வாணலியில் கலந்து வைத்துள்ள சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.
  •  சோளமாவு சேர்த்ததால்  திக்காகிவரும் அப்படி திக்கான பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவர் பக்கோடா போட்டு நன்றாக கலந்து விட்ட வேண்டும்.
  • காலிஃப்ளவர் நன்றாக கலந்த பிறகு ஒரு ப்ளேட்டில் எடுத்து அதன் மேல் வெள்ளை எள் தூவி பரிமாறினால் சைனீஸ் ஸ்டைல் காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்.

Nutrition

Serving: 1bowl | Calories: 253kcal | Carbohydrates: 58.1g | Protein: 9.8g | Fiber: 36.2g