- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- LUNCH
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாகதான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெந்துகொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும். சிக்கன் பிரியாணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை. தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது.
பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் உணவுகள் அனைத்தும் நன்கு காரசாரமாகவும், மசாலா சேர்த்து நன்கு சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் மலபார் சிக்கன் பிரியாணி. பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் பாசுமதி அரிசியில் செய்யப்படும் மலபார் பிரியாணிக்கு நிகராகாது. மலபார் பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மலபார் நெய்சோறு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு பட்டை, கிராம்பு, மிளகு, உப்பு சேர்த்து, கொதித்ததும் அரிசி சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆற விடவும். இது ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊறவைத்த சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அரிசி முக்கால் பங்கு வெந்ததும் நெய் ஊற்றி சிக்கன் கிரேவியை சேர்க்கவும். பின் அதன் மேல் வேகவைத்த சாதம் சேர்க்கவும். அதின் மேல் மல்லி இலை, புதினா இலை, முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மலபார் ஸ்பெஷல் பிரியாணி தயார்.






