Home அசைவம் ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும்...

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அந்த அளவிற்கு ஈரலின் சுவை சூப்பராக இருக்கும். ஈரல் பிடிக்காதவர்களும் கூட ஈரலை விரும்பி சாப்பிடும் அளவிற்கு நாம் செய்து கொடுத்தால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள். ரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளவர்கள் இந்த ஈரலை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

-விளம்பரம்-

 கர்ப்பிணி பெண்கள் ஈரலை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் இந்த ஈரலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் அதிகரிக்கும். எனவே ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் இந்த ஈரலை வாரம் ஒரு முறை  சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

ஈரல் பிடிக்காதவர்கள் ஒரு முறை இந்த குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவலை சாப்பிட்டால் அவர்களுக்கு ஈரல் மிகவும் பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த வருவல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஈரல் பிடிக்காதவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி செய்து கொடுங்கள் பிறகு அவர்களே உங்களிடம் ஈரல் செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள்.

மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த வறுவலை நாம் சாதத்தோடு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இந்த வரறுலை கொஞ்சம் கிரேவி பதத்திற்கு செய்து அதனை இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும் காம்பினேஷனும் சூப்பராக இருக்கும். இந்த அருமையான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவலை எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
4 from 1 vote

குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் | Capsicum Liver Pepper Fry In Tamil

குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஈரல் பிடிக்காதவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி செய்து கொடுங்கள்பிறகு அவர்களே உங்களிடம் ஈரல் செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்தகுடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த வறுவலை நாம் சாதத்தோடு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இந்தவரறுலை கொஞ்சம் கிரேவி பதத்திற்கு செய்து அதனை இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும்சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும் காம்பினேஷனும் சூப்பராக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Capsicum Liver Pepper Fry
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஈரல்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  •  
    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம்  சேர்த்து  தாளித்துக் கொள்ளவும் தாளித்த பின்னர் பெரிய வெங்காயம் குடைமிளகாயை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இரண்டும் வதங்கியவுடன் சிறிதளவு கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு வைத்துள்ள ஈரலை அதனுடன் சேர்த்து கிளறவும். மிளகு தூள் மற்றும் தேவையான அளவிற்குஉப்பு கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் சுடச்சுடதயார்.

செய்முறை குறிப்புகள்

இந்த மழைக்காலத்தில் உங்களுக்கு இருமல் இருந்தாலும் இதனை சாப்பிடும் பொழுது விரைவில் சரியாகிவிடும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதனை செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 3mg | Sodium: 124mg | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

-விளம்பரம்-