ருசியான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு பிரியாணி செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி, என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாகதான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெந்து கொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும். சிக்கன் பிரியாணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை. தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது.

-விளம்பரம்-

பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் கொங்கு நாட்டு பிரியாணிக்கு நிகராகாது. கொங்கு நாட்டு ஸ்டைலில் சிக்கன் பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம். இந்த பிரியாணி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இந்த சுவையான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்.

- Advertisement -
Print
3.67 from 3 votes

கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி | Kongu Style Chicken Biryani Recipe In Tamil

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி, என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாகதான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெzந்து கொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் கொங்கு நாட்டு பிரியாணிக்கு நிகராகாது. கொங்கு நாட்டு ஸ்டைலில் சிக்கன் பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Kongu Style Chicken Biryani
Yield: 4 People
Calories: 93kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 2 கப் சீரக சம்பா அரிசி
  • 3 பட்டை, ஏலக்காய்
  • 1 இலவங்கம்
  • 4 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்

அரைக்க :

  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 மராத்தி மொக்கு, அன்னாச்சி பூ, ஜாதிபத்ரி
  • 10 ரோஜா இதழ்கள்
  • 1/4 கப் புதினா

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் புதினா சேர்த்து லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • பின் இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் சிக்கனை சேர்த்து வதக்கி தயிர், எலுமிச்சை சாறு, புதினா சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விடவும்.
  • அதன்பிறகு அரிசியை வடிகட்டி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொங்கு நாட்டு ஸ்டைலில் சிக்கன் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 93kcal | Carbohydrates: 9.1g | Protein: 3.49g | Fat: 2.79g | Sodium: 54mg | Potassium: 77mg | Fiber: 1.27g | Vitamin A: 29IU | Vitamin C: 604mg | Calcium: 24mg | Iron: 2.21mg

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் குழம்பு வச்சு போர் அடிக்குதா அப்போ இந்த தேங்காய் பால் கோழி குழம்பு ஒரு முறை செஞ்சு பாருங்க!