Home அசைவம் எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் குழம்பு வச்சு போர் அடிக்குதா அப்போ இந்த தேங்காய் பால்...

எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் குழம்பு வச்சு போர் அடிக்குதா அப்போ இந்த தேங்காய் பால் கோழி குழம்பு ஒரு முறை செஞ்சு பாருங்க!

சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்சது தான் சிக்கன் இந்த சிக்கன்ல பொதுவா நம்ம என்ன செஞ்சாலும் அதைவிட டேஸ்ட்டு ரொம்ப சூப்பரா நமக்கு கிடைக்கும். மட்டன் மீன் அப்படின்னு வாங்க நிறைய காசு இல்ல அப்படின்னா எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது இந்த சிக்கன் தான் சிக்கன் வாங்கி ஒரு சிக்கன் கிரேவி வச்சு அது கூட ரசம் விட்டு வச்சிட்டா போதும் மதியம் சாப்பாடு ஒரு சூப்பரான சாப்பாடு இருக்கும். வீட்ல சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிக்கன் குழம்பு பிடிக்கும் ஒருத்தருக்கு கெட்டியா செஞ்சா பிடிக்கும் ஒருத்தருக்கு தண்ணியா செஞ்சா பிடிக்கும் இன்னும் சில பேருக்கு தேங்காய் ஊத்தி செஞ்சா ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம தேங்காய் பால் வச்சு செய்யக்கூடிய தேங்காய் பால் கோழி குழம்பு தான் பார்க்க போறோம். தென் தமிழகத்தில் தான் பொதுவாக எல்லாரும் தேங்காய் அரைச்சு ஊத்தி குழம்பு வைப்பாங்க.

அதோட டேஸ்ட் தனிதான் ரொம்பவே அருமையான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்‌ எப்போவுமே நம்ம என்ன குழம்பு வச்சாலும் கடைசியா கொஞ்சம் தேங்காய் அரைச்சு ஊத்தினா டேஸ்ட் கொஞ்சம் டிஃபரண்டா குழம்பு கொஞ்சம் கெட்டியா ரொம்ப சூப்பரா இருக்கும். அத நம்ம இட்லி, தோசை சப்பாத்தி பூரி சாதம் இடியாப்பம் அப்படின்னு எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷா கண்டிப்பா இந்த குழம்பு இருக்கும்.

இந்த குழம்பு செய்றதுக்கு நமக்கு நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது.கம்மியான பொருட்கள் வச்ச சீக்கிரமாவே சூப்பரான ஒரு தேங்காய் பால் கோழி குழம்பு நம்ம வச்சிடலாம். ஒரு சிலருக்கு கோழி குழம்பு பிடிக்காம இருக்கும் அவங்க எல்லாருக்குமே இந்த தேங்காய் பால் ஊத்தின கோழி குழம்பு கொடுத்தீங்கன்னா போதும் அதுக்கப்புறம் அவங்களுக்கு விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. இப்ப வாங்க இந்த ஒரு அருமையான தேங்காய் பால் கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

தேங்காய் பால் கோழி குழம்பு | Coconut Milk Kozhi Kulambu

சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்கவரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்சது தான் சிக்கன் இந்த சிக்கன்ல பொதுவா நம்ம என்ன செஞ்சாலும் அதைவிட டேஸ்ட்டு ரொம்ப சூப்பரா நமக்கு கிடைக்கும். மட்டன் மீன் அப்படின்னு வாங்க நிறைய காசு இல்ல அப்படின்னா எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது இந்த சிக்கன் தான் சிக்கன் வாங்கி ஒரு சிக்கன் கிரேவி வச்சு அது கூட ரசம் விட்டு வச்சிட்டா போதும் மதியம் சாப்பாடு ஒரு சூப்பரான சாப்பாடு இருக்கும். வீட்ல சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு கோழி குழம்பு பிடிக்காம இருக்கும் அவங்க எல்லாருக்குமே இந்த தேங்காய் பால் ஊத்தின கோழி குழம்பு கொடுத்தீங்கன்னா போதும் அதுக்கப்புறம் அவங்களுக்கு விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Coconut Milk Kozhi Kulambu
Yield: 4
Calories: 28kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கோழிக்கறி
  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 டீஸ்பூன் சிக்கன் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
     
  • வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் கோழிக்கறியை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு சிக்கன் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்ததும் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பத்து நிமிடத்திற்கு பிறகு அனைத்தும் சேர்ந்து வெந்து குழந்தை பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சுவையான தேங்காய் பால் கோழி குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g