பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

- Advertisement -

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் பெங்காலி சிக்கன் செய்யுங்கள். இந்த பெங்காலி சிக்கன் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். பெங்கால் பாரம்பரிய உணவுகள் சுவைக்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய பெங்காலி ஸ்டைல் சிக்கன் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம். வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க பெங்காலி சிக்கனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது.

-விளம்பரம்-

இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். இந்த சிக்கனை ரொட்டி, நாண் அல்லது சாதத்துடன் சிறிது எலும்பிச்சை சாறுடன் ஆனியன் ரிங்ஸ் மற்றும் பச்சை சட்னியுடன் சாப்பிட்டால் ஆகா மிகவும் சுவையாக இருக்கும். இந்த பெங்காலி சிக்கன் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் | Bengali Mustard Chicken Recipe In Tamil

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் பெங்காலி சிக்கன் செய்யுங்கள். இந்த பெங்காலி சிக்கன் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். பெங்கால் பாரம்பரிய உணவுகள் சுவைக்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய பெங்காலி ஸ்டைல் சிக்கன் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Bengali Chicken Mustard
Yield: 4 People
Calories: 196kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 டீஸ்பூன் சிக்கன்
  • 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்
  • 2 டீஸ்பூன் மஞ்சள் கடுகு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் மஞ்சள் கடுகை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் தயிர் சேர்த்து கலந்து மூடி வைத்து வேக விடவும். சிக்கன் பாதி வெந்ததும் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மஸ்டர்டு சிக்கன் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 196kcal | Carbohydrates: 3.4g | Protein: 24.9g | Fat: 2.8g | Saturated Fat: 1.7g | Sodium: 5mg | Potassium: 182mg | Fiber: 4.7g | Vitamin A: 54IU | Vitamin C: 289mg | Calcium: 25mg | Iron: 9.9mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!