Home அசைவம் நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள்.

-விளம்பரம்-

ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று என்பதால் இன்று நாம் சிக்கன் கொண்டு சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

சிக்கன் பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. அது போலவே ஊறுகாயும். பிடிக்காத உணவாகவே இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் போதும் அந்த உணவை சாப்பிட சுவையாக இருக்கும். அந்தவகையில் எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய், கத்திரிக்காய் ஊறுகாய் எல்லாம் ருசித்து சலித்தவர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. இன்று சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Print
No ratings yet

ஆந்திரா சிக்கன் ஊறுகாய் | Andhra Chicken Pickle Recipe In Tamil

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று என்பதால் இன்று நாம் சிக்கன் கொண்டு சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: andhra, Indian
Keyword: Andhra Chicken Pickle
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி எலும்பில்லாத சிக்கன்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் நல்லெண்ணெய்
  • 1/4 கப் மிளகாய்த்தூள்
  • 1 எலுமிச்சை சாறு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 பட்டை
  • 4 இலவங்கம்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  • பின் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் இவை நன்கு ஆறியதும் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிக்கன் ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 128kcal | Carbohydrates: 5.7g | Protein: 7.2g | Fat: 2.6g | Polyunsaturated Fat: 1.2g | Sodium: 95mg | Potassium: 169mg | Fiber: 3.47g | Vitamin A: 77IU | Vitamin C: 406mg | Calcium: 24mg | Iron: 7.1mg

இதையும் படியுங்கள் : பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!