Home அசைவம் வீடே மணக்க மணக்க ருசியான இறால் தீயல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உடலுக்கு...

வீடே மணக்க மணக்க ருசியான இறால் தீயல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப்பர் அசைவ ரெசிபி உங்களுக்காக.

இறால் தீயல் மிகவும் ருசியான ஒரு அசைவ ரெசிபி. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்தே இதை செய்து பார்க்கலாம். இதை பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால், இறாலில் வாசத்துடன் அருமையான இருக்கும் . உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இறால் தீயலை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தியை கூட்டும் இறால்..

-விளம்பரம்-

பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க.
இறால் குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதனை இறால் தீயல் என்று சொல்வார்கள்.

இந்த தீயலை நாமும் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை இறால் குழம்பை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம். கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பை இப்படி செஞ்சா, தட்டு நிறைய சாப்பாடு இருந்தாலும் பத்தே நிமிடத்தில் காலியாகி விடும். இதன் சுவையே தனி தான்.

Print
5 from 1 vote

இறால் தீயல் | Prawn Theeyal Recipe In Tamil

இறால் குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படிஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். நமது அண்டை மாநிலமான கேரளாவில்இதனை இறால் தீயல் என்று சொல்வார்கள். இந்த தீயலை நாமும் செய்து சாப்பிடலாம். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை இறால் குழம்பை எவ்வாறு செய்வதுஎன்று இந்த பதிவில் நாம் காண்போம். கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பை இப்படி செஞ்சா,தட்டு நிறைய சாப்பாடு இருந்தாலும் பத்தே நிமிடத்தில் காலியாகி விடும். இதன் சுவையேதனி தான்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Prawn Theeyal
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் இறால்
  • 1 வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் துண்டுகள்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 முருங்கைக்காய்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 தேக்கரண்டி மல்லி தூள்
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • புளி தேவைக்கேற்ப
  • உப்பு சிறிது
  • தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 12 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் இறால்களை எடுத்து கழுவி வைக்கவும். புளி எடுத்து 1/4 கப் சூடான தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • ஒரு கடாயில் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகள் எடுத்து பொன்னிறமாக வறுக்கவும், இப்போது மிளகாய் தூள்,மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி ஆறிய பின் ஜாரில் போட்டு மசிக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், சிறிது உப்பு, தேங்காய் துண்டுகள் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
  • இப்போது தேங்காய் பேஸ்ட், புளி கரைசல், பச்சை மிளகாய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கி தக்காளி போட்டுநன்கு கலந்து 1.5 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின் கறிவேப்பிலை மற்றும் இறால்களைசேர்த்து, ஒரு மூடி கொண்டு மூடி இறால் வேகும் வரை சமைக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து இறால்தீயலில் அவற்றை ஊற்றி பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g

இதையும் படியுங்கள் : நாளை சண்டே இறால் வாங்கி இப்படி ருசியான பாய் வீட்டு இறால் பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க!