- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? மூன்று வேளை பிரியாணி குடுத்தாலும் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பிரியாணி. இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது!! என்று பாடும் வரிக்கு ஏற்ப இந்த வாழ்கையே நன்றாக ருசித்து சாப்பிடத்தான். அதுவும் பிரியாணி என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 3 வேளையும் பிரியாணி கொடுத்தாலும் நன்றாக சாப்பிட எப்போதும் 1 கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
பாய் வீட்டு மட்டன் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாத பிரியாணி ’பாய் வீட்டு கல்யாண பிரியாணி’. உணவுக்கும், நட்புக்கும் மதம் ஒரு தடை அல்ல. உங்களுக்கு முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாளிகள் தான். இஸ்லாமியர்களின் திருமணங்களில் கறியின் மணத்துடன் ஆவி பறக்க இலையில் பரிமாறப்படும் இந்த பிரியாணி வேறு எங்குமே கிடைக்காத ஒன்று. இஸ்லாமியர்களின் இந்த பிரியாணி கலாச்சாரம், அவர்களின் தனி அடையாளமாகவே உள்ளது.
இப்படி தனக்கென ஒரு தனி சுவையை கொண்டிருக்கும் இந்த பாய் வீட்டு பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒரு புறம் கை பக்குவம் இருந்தாலும், பிரியாணிக்கு என தனி மணத்தையும், சுவையையும் கொடுப்பது அவர்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் அந்த பிரியாணி மசாலா தான். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணியின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான பிரியாணியை இந்த சண்டே வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சண்டே ஸ்பெஷலாக காளான் இறால் சில்லி கறி ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள்! தட்டு நிறைய சாதம் போட்டாலும் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மராட்டி மொக்கு சேர்த்து பொரியவிடவும்.
அதன்பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் கழுவி சுத்தம் செய்த இறால் மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின் அரிசியை குக்கரில் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் ஊற வைத்த பாசுமதி அரிசி தண்ணீரை இதில் சேர்க்கவும்.
அதன்பிறகு எலுமிச்சை சாறு மற்றும் மீதமுள்ள மல்லி, புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பாய்வீட்டு இறால் பிரியாணி தயார்.






