வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இறால் உணவு குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு . எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் , இறாலுடன் சேர்த்து செய்தல் அதன் ருசியம் வாசமும் அதிகமாக இருக்கும்.
காளான் மற்றும் இறாலை சிறிது மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான கறி செய்து பாருங்கள். சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. , ஒரு சுவையான காளான் ரெசிபிகளில் ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி காளான் இறால் சில்லி கறிசெய்து பாருங்க.
காளான் இறால் சில்லி கறி என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் இறால் சில்லி கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.வான இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
காளான் இறால் சில்லி கறி | Mushroom Prawn Chilli Curry
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- வேக வைத்த இறால்
- எண்ணெய்
- இஞ்சி பூண்டு விழுது
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மல்லி தூள்
- சீரக தூள்
- வெங்காயம்
- தக்காளி
- காளான்
- பச்சை மிளகாய்
- உப்பு
- கரம் மசாலா
- கொத்தமல்லி இலை
செய்முறை
- இறால், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் (1/2 தேக்கரண்டி) ,உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள்(1/4 தேக்கரண்டி) – ஒரு நிமிடம் வரை இதை சமைத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும். வெங்காயம் (பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்),மீதமுள்ள மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- நறுமணப் பொருட்கள் வதங்கும் வரை வதக்கவும். இவை நன்றாக வதங்கும் வரை அடுப்பில் இருந்து இறக்கும் வரை வதக்கவும்.
- இப்பொழுது காளான்களை சேர்க்கவும், மற்றும் நறுமணப் பொருட்கள் காளான் தயாரானவுடன் தக்காளி மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்,பக்குவமாக ஆன பிறகு வேக வைத்த இறால் மற்றும் பச்சைமிளகாயை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை சமைக்கவும்,
- அடுப்பை அனைக்கும் முன் கரம் மசாலா, கொத்தமல்லி இலையை சேர்க்கவும்,காளான் இறால் சில்லி கறி தயார்.