Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக நினைத்து இருப்போம் ஆனால் கற்றாழையில் நிறைய நன்மைகள் உள்ளது. இப்பொழுதெல்லாம் நிறைய பேர் வீட்டில் கற்றாழையை நாம் நட்டு வைத்து வளர்க்கிறோம் உடலுக்கும் சரி வீட்டிற்கும் சரி கற்றாழை மிகவும் நல்லது.

-விளம்பரம்-

கற்றாழையின் பயன்கள்

கற்றாழையை ஜூஸாக அடித்து குடித்தால் உடல் சூடு சட்டை என குறைந்து விடும் கற்றாழையை முடித்து முகத்திற்கு தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும் முகம் பளபளப்பாக மாறும். இப்படி கற்றாழையில் எண்ணற்ற பயன்கள் உள்ளது இதை அறிந்தவர்கள் கற்றாழையை ஒருபோதும் அலட்சியமாக நினைக்க மாட்டார்கள் கற்றாழை உங்கள் வீட்டில் இல்லை என்றால் உடனடியாக கற்றாழையை வீட்டில் நட்டு வைக்கவும் கற்றாழை ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் வீட்டின் செழிப்புக்கும் நல்லது. அந்த வகையில் கற்றாழையை வீட்டில் எந்த திசையில் நட்டு வைத்தால் நம் வீட்டிற்கு நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கற்றாழையை வீட்டில் வைக்க வேண்டிய திசை

வாஸ்து படி கற்றாழையை மேற்கு திசையில் வைக்க வேண்டும் அப்படி மேற்கு திசையில் வைத்தால் வேலை சிறப்பாக இருக்கும் பணியிடத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் வீட்டில் கற்றாழையை மேற்கு திசையில் நட்டு வைக்கலாம்.

மேலும் வீட்டின் தென்கிழக்கு திசையிலும் நீங்கள் விருப்பப்பட்டால் கற்றாழையை வைத்துக் கொள்ளலாம். கற்றாழையை மொத்தமாக நடவு செய்வதற்கும் இந்த திசை சிறப்பானதாக இருக்கும். மனதிற்கு அமைதி கிடைக்க கற்றழகி கிழக்கு திசையில் நட்டு வைக்கலாம்.

கற்றாழை செடியை வீட்டில் நட்டு வைப்பதன் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் நன்மைகள்

கற்றாழைச் செடியை வீட்டில் சரியான திசையில் நட்டு வைப்பதன் மூலம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மகிழ்ச்சி செழிப்பு மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

-விளம்பரம்-

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கற்றாழை செடிகளை வைப்பது பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல வேலை போன்றவற்றிற்கு வழிகாட்டும். ஒருவருடைய கௌரவம் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் வரும் அனைத்து தடைகளும் நீங்குவதற்கு கற்றாழைச் செடியை சரியான திசையில் நட்டு வைக்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருந்தால் போதும் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்!