புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளானது முருகனுக்கு உரிய மிகவும் சிறந்த நாளாகும்.

“கருணைக்கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே அதுபோலவே முருகப்பெருமான் உலக மக்களை காப்பதற்காக வைகாசி விசாகம் அன்று தோன்றியுள்ளார்.
வசந்த காலம்
இந்த கோடைகாலத்தில் முடிவிலும் வசந்த காலத்தில் ஆரம்பத்திலும் வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதால் இதற்கு வசந்த விழா என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. கோடை காலத்தைப் போல நம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியை வசந்தத்தை தருவதற்காக முருகப்பெருமாள் தோன்றியதால் வைகாசி விசாகம் முருகனுக்கு உரிய ஒரு விழாவாகும். இதனை நிரூபிக்கும் வகையில் திருச்செந்தூரில் வைகாசி விசாக விழாவின் பொழுது அங்கு உள்ள வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து மகிழ்ச்சியை அளிப்பார். அந்த வகையில் முருகப்பெருமானுக்கும் வைகாசி விசாகத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வைகாசி விசாகம்
முருகப்பெருமானுக்கு இருக்கும் பலவிதமான விழாக்களில் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாக முருகனுடைய அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும். முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத் என்று பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும். புராணங்களின்படி முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தார்.
எனவே தீமைகளை அழைத்து மகிழ்ச்சியையும் நன்மைகளையும் இந்த உலகத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதே முருகப்பெருமானின் அவதார நோக்கமாகும். பல இடங்களில் உள்ள முருக பெருமானுடைய கோவிலிலும் அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாகத்திற்கு சிறப்புக்குரிய ஒரு இடமாக கருதப்படுகிறது.
வைகாசி விசாக திருநாளின் வரலாறு
புராணங்களின்படி, பராசர முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார் அவருக்கு ஆறு பிள்ளைகள். ஆறு பிள்ளைகளுமே மிகவும் குறும்புக்காரர்கள் இவர்கள் ஒரு தடவை ஆற்று குளிக்க போகும் போது அங்குள்ள நீரை அசுத்தம் செய்து அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள் எனவே அந்த ஆற்றில் உள்ள மீன்கள் கவலைகள் என அனைத்து உயிரினங்களும் துன்பத்தை சந்தித்தன. ஆனாலும் கூட அந்த ஆறு பிள்ளைகளும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்து ஆற்றின் நீரை முழுவதுமாக அசுத்தம் செய்து விட்டனர். இது தெரிந்த பராசர முனிவர், ஆறு என்பது சிவபெருமானுக்கு சமமானது அதனால் நீங்கள் அதனை இப்படி அசுத்தம் செய்து கொண்டிருப்பது தவறு ஆட்சியை நாம் மரியாதையோடு வணங்கி அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அவருடைய மகன்களுக்கு அறிவுரை வழங்கினார் ஆனாலும் கூட அவர்கள் கேட்கவில்லை.
சாபம் தீர்த்த முருக பெருமான்

ஆறு பிள்ளைகளுடைய இந்த செயலால் பராசர முனிவர் மிகவும் கோபம் அடைந்து அவர்களுடைய பிள்ளைகளை நீங்களாக மாறும்படி சாபம் கொடுத்தார்.ஆறு பிள்ளைகளும் தவறை உணர்ந்து இதற்கு சாப விமோசனம் சொல்லுங்கள் என கேட்க அதற்கு பராசர முனிவரும் பார்வதியின் கருணையால் தான் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்று விட்டார். ஆறு பிள்ளைகளும் ஆற்றில் நீங்களாக வாழ்ந்து கொண்டிருந்தனர். கைலாயத்தில் குழந்தையாக இருந்த முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் ஞானபால் கூட்டிக் கொண்டிருக்கையில் முருகப்பெருமானின் வாயிலிருந்து சிந்திய ஒரு துளி பால் பூலோகத்தில் பராசர முனிவர்களின் பிள்ளைகள் நீங்களாக இருந்த ஆற்றில் விழுந்தது. அதை சாப்பிட்ட ஆறு நீங்களும் முனிவர்களாக மாறி சிவபெருமானுக்கு பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வணங்கினர்.
திருச்செந்தூர் மற்றும் வைகாசி விசாகத்திற்குமான தொடர்பு
இந்த ஆறு மகன்கள் உடைய பூஜையால் மகிழ்ந்து போன சிவபெருமான் திருச்செந்தூர் சென்று அங்கு தவம் செய்தால் உங்களுக்கு திரு காட்சி கிடைக்கும் என கட்டளையிட்டார் அதன்படி அந்த ஆறு முனிவர்களும் திருச்செந்தூருக்கு சென்ற தவம் செய்தனர். அப்பொழுது வைகாசி விசாகத் திருநாள் என்று முருகப்பெருமான் அவர்களுக்கு காட்சி தந்து சிவப்பதம் அடையும் வரத்தையும் அருளினார். இந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைவு கூறும் விதமாகத்தான் இப்பொழுதும் திருச்செந்தூரில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழாவின் பொழுது வசந்த மண்டபத்தில் ஒரு தண்ணீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகள் வைத்து அவர்களுக்கு முருக பெருமான் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடக்கும்.
வைகாசி விசாக விரதத்தின் பலன்கள்
முருகனுக்கு உகந்த நாட்கள் என்று விரதம் இருந்து வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வைகாசி விசாக விழாவின்போது நெருப்பிலிருந்து அவதரித்த முருக பெருமானின் திருமேனியை குளிர்விப்பதற்காக முருகனுடைய அறுபடை வீடுகளிலும் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள்.

மேலும் குறிப்பாக திருச்செந்தூர் திருத்தலத்தில் கருவறையில் தண்ணீர் நிரப்பி ஆத்ம சாந்தி அபிஷேகம் கூட நடத்தப்படும். இந்த வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தால் மூன்று ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அந்த பாவத்தால் இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்கும் பலவிதமான பிரச்சனைகளும் துன்பங்களும் நீங்கிவிடும்.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!




