Home ஆன்மிகம் கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள்...

கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!

நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் நாம் அதை சொல்லி அழுகின்ற இடம் என்றால் கோவில் தான் கோவிலில் உள்ள தெய்வங்களிடம் நமக்குள்ள பிரச்சினைகளை சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டால் அந்த பிரச்சனைகள் சரியாகும். அந்த வகையில் எல்லா தெய்வங்களும் ஒன்றிணைந்து இருக்கக்கூடிய தெய்வம் முருகன் என்று புராணங்கள் நமக்கு சொல்கின்றது. நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளான நோய் குழந்தை கடன் வேலை என அனைத்து பிரச்சினைகளையும் முருகனிடம் சொல்லி வழிபட்டுக் கொண்டால் அந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

-விளம்பரம்-

முருகப்பெருமான் நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்து நம்மை பாதுகாப்பார் என்பது அனைவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் நாம் கேட்ட வரத்தை முருக பெருமான் தருவதற்கு சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி விரதம் இருந்தால் நமக்கு முருகப்பெருமான் நிச்சயமாக தருவார் என்று பலரும் நம்பிக்கையுடன் சொல்வார்கள். ஆனால் அந்த விரதத்தை முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் மட்டுமே முழுமையாக செய்து முடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது முருகப் பெருமான் பலவிதமான சோதனைகளை நமக்கு தருவார் அந்த சோதனைகள் அனைத்தையும் தகர்த்து எறிந்து வெல்பவர்களே முருகப் பெருமானின் முழு அருளையும் பெற்று அந்த விரதத்தையும் முடிக்க முடியும்.

முருகனுக்கு விரதம்

அனைத்து தெய்வங்களுக்கும் இருக்க வேண்டிய விரதங்கள் என்று பலவிருதங்கள் உண்டு ஆனால் முருக பெருமானுக்கு மூன்று விதமான விரதங்கள் இருக்கிறது. நட்சத்திர விரதமான விசாகம் கிருத்திகை பூரம் என்ற விரதமும் ,சஷ்டி திதியில் வரும் விரதமும், செவ்வாய்க்கிழமைகளில் இருக்கும் விரதம் கிழமை விரதம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு மாதத்திற்கு வளர்பிறை தேய்பிறை என சஷ்டி திதிகள் வரும்.தேய்பிறை சஷ்டியில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் நோய்நொடிகள் தீர வேண்டும் என்றும் வளர்பிறை சஷ்டியில் வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் திருமண யோகம் வேண்டும் குழந்தை யோகம் வேண்டும் என்றும் விரதம் இருக்கலாம். முருகனுக்கு இருக்கக்கூடிய விரதங்களில் ஐப்பசி மாதம் வரக்கூடிய கந்த சஷ்டி விரதம் தான் மிகவும் நீண்ட 7 நாட்கள் இருக்கக்கூடிய விரதம். இந்த ஏழு நாள் விரதம் மிகவும் சிறப்பான ஒன்று.

கேட்ட வரங்களை தரக்கூடிய 48 நாட்கள் விரதம்

அனைத்து விரதங்களையும் இருந்து முடித்த பிறகு நமக்கு அதனால் எந்த பலன்களும் கிடைக்கவில்லை என்றால் முருகப்பெருமானே முழுமனதோடு வேண்டிக் கொண்டு மிகவும் கடினமான பிரதமான 48 நாட்கள் இருக்கக்கூடிய விரதத்தை இருக்கலாம். ஒன்பது கிரகங்கள் 12 ராசிகள் 12 நட்சத்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் 48 நாட்கள் விரதம். பொதுவாக ஐயப்பனுக்கு தான் 48 நாள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். ஆனால் அதேபோல் முருகப் பெருமானம் இந்த கிரகங்களையும் ராசிகளையும் நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய தெய்வம் என்று கூறுவார்கள். ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் 48 நாட்கள் விரதம் மிகவும் சிறப்பானது. நம் ஆரோக்கியத்திற்காகவோ அல்லது ஆன்மீகத்திற்காகவும் 48 நாட்கள் ஒரு விஷயத்தை செய்து வந்தால் அதற்கு நாம் பழகி விடுவோம் என்று சொல்லப்படுகிறது. இதனால் உடலும் மனமும் சீராகி நல்லதே நடக்கும் என்று கூறப்படுகிறது.

48 நாட்கள் விரதம் இருக்க வேண்டிய முறை

முருகப்பெருமானுக்காக 48 நாட்கள் விரதம் இருக்க துவங்கும் போது சஷ்டி கிருத்திகை விசாகம் போன்ற விரத நாட்களில் இருந்து இருக்க தொடங்கலாம். தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றிகள் திருநீர் அணிந்து முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் போட்டு நெய்வேத்தியத்திற்காக பழம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து வைத்து வழிபடலாம். எதுவுமே வாங்க முடியவில்லை என்றால் ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து வைக்கலாம் அல்லது முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவும் படைத்து வழிபடலாம். தினமும் காலையில் பூஜை செய்யும்போது கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனைகள் தீர வேண்டுமோ அந்த பிரச்சனையை முருகப்பெருமானிடம் கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

தினமும் ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு உண்ணாமல் பால் அல்லது ஏதாவது ஒரு நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளவும். முடியாதவர்கள் மூன்று வேளையும் சைவ உணவாக சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு வேலை மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அந்த நாட்களை கழித்துக் கொண்டு மீதி இருக்கும் நாட்களில் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

48 நாட்கள் விரதத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள்

குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தில் ஈடுபடக் கூடியவர்கள் 48 நாட்களும் கண்டிப்பாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது. முருகப்பெருமானின் அருளால் உங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு உங்கள் உடலையும் மனதையும் நீங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கான கால அளவு தான் இது. மற்ற காரணங்களுக்காகவும் இந்த விரதத்தை இருப்பவர்கள் முழு மனதோடு பிடிவாதமாக முருகப்பெருமானிடம் உங்கள் பிரச்சனைகளை கூறி நீங்கள் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை மட்டும் நீங்கள் கடைப்பிடித்தால் நிச்சயமாக முருகப்பெருமான் உங்களுக்கு அருள் புரிவார் நீங்கள் வேண்டிய வரத்தை உங்களுக்கு கொடுத்தே தீருவார் அதனால் முழு மனதோடு இந்த விரதத்தை நீங்கள் செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : செவ்வாய்க்கிழமை அன்று முருகரை இவ்வாறு வழிபட்டால், முருகனின் அருளால் பிரச்சனைகள் தீர்ந்து, நன்றாக வாழலாம்!

-விளம்பரம்-