இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருந்தால் போதும் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்!

- Advertisement -

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். இன்றைய கால கட்டத்தில் பணத் தேவை அனைவருக்குமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனையோ கஷ்டங்களை கடந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் பணவரவை அதிகரிக்க வேண்டும் என்றால் அங்கு முதலில் நமக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளும், சுக்ர பகவானின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும்.

-விளம்பரம்-

பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது என்று கவலைப்படுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். சிலரின் வீட்டில் பண வரவு சிறப்பாக இருந்தாலும், ஆனாலும் ஏதேனும் ஒருவகையில் செலவாகிவிடுகிறது அதனால் அவர்கள் சதா பணப்பிரச்னை என புலம்பிக் கொண்டிருப்பார்கள். கடனாக நம்மிடம் பணம் வாங்கியவர்கள் கூட பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி விடுகின்றனர். நமக்கு தடையின்றி பணம் வரவும், வீண் விரைய செலவுகள் ஏற்படாமல் தடுக்கவும், கொடுத்த கடன்கள் திரும்ப வசூலாகவும் சில வழிபாடுகளை செய்ய வேண்டும்.

- Advertisement -

சுக்கிர பகவான்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் என்று அழைக்கப்படுகிறார். அழகுக்கும் பிரபலத்துக்கும், பிறரை ஈர்ப்பதற்கும் உண்டான அருளை வழங்குபவர் சுக்கிர பகவான். அதுமட்டுமல்ல, செல்வத்துக்கும் காரகர் சுக்கிரனே. வாழ்க்கைத் தரம், ஆடம்பரமான வாழ்க்கை என சொகுசுக்கும் ஆடம்பரத்துக்கும் அருள் புரிபவர் சுக்கிரன். சுக்கிர யோகம் இருந்தால் ஒருவருக்கு சுகபோக வாழ்வு அமையும் என்பது முன்னோர்கள் கூற்று. சுக்கிர பகவானை பிரார்த்தனை செய்தால் அவருடைய அருள் அபாரமாய் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சுக்கிர பகவானின் அருளைப் பெற

சுக்கிர பகவானுக்கு வாசனை மிகுந்த பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் வெள்ளிக்கிழமை நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு வாசனை மிகுந்த மல்லிகை பூவை மாலையாக கட்டி அணிவிப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். அல்லது வீட்டின் பூஜையறையில் வாசனை மிகுந்த பொருட்களை பயன்படுத்தி சுக்கிர பகவானை வழிபாடு செய்வதால் அவரின் அருளைப் பெற முடியும் என சொல்லப்படுகிறது.

தண்ணீரில் சிறிது ஏலக்காய் பன்னிர் சேர்த்து சாமிப்படங்களை துடைத்து விட்டு பின் வீட்டில் விளக்கு ஏற்றினால் சுக்கிர பகவானின் பலம் கூடும்.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலையில் வாசனை மலர்களால் பூஜையறையை அலங்கரித்து விட்டு விளக்கேற்றி மகாலட்சுமி தாயாரை வணங்கி வருவதன் மூலம் சுக்கிரனின் அருள் கிட்டும்.

வெள்ளி என்பது சுக்கிர பகவானுக்கு உகந்த உலோகம். அதனால் பெண்கள் வெள்ளி மோதிரம், மெட்டி போன்ற வெள்ளி ஆபரணம் அணிவதால் சுக்கிரனின் அருள் கிட்டும். வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளியிலான ஒரு பொருளையாவது அணிய வேண்டும்.

சுக்கிர பலம் கூட்டுவதற்கான‌ செடிகள்

துளசி செடி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். துளசி செடி மகாலட்சுமி தாயாருக்கு மட்டும் உகந்தது இல்லை சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்தது. வெள்ளிக்கிழமை தோறும் துளசி மாடத்திற்கு முன்னால் விளக்கு ஏற்றி வந்தால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும்.

-விளம்பரம்-

மருதாணி

செடிமகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். யார் ஒருவர் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் துன்பமெல்லாம் தீர்ந்து குடும்பம் வளம் பெறும் என்பது முன்னோர்கள் வாக்கு. குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது. இந்த மரம் நமது வீட்டில் இருக்கிறது என்றாலே சுக்கிர பகவானின் அருளால் நமது வீடு நிறையும் என நம்பப்படுகிறது.

சுக்கிர பகவானுக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். அதனால் சுக்கிர வாரத்தில், சுக்கிர பகவானை வழிபடுவது விசேஷமானது.‌ சுக்கிர பகவானை மனதார வேண்டிக்கொள்வதால் கஷ்டங்களும் துக்கங்களும் காணாமல் போகும். கவலைகள் அனைத்தும் பறந்து போகும். பொன்னும் பொருளும் சேரும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.‌

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி தேவியின் அருள் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள்!