தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கிறார்கள். தங்கம் மங்கலப்பொருள் மட்டுமல்ல. சேமிப்பும்கூட. நீண்ட நாள்களுக்கு என்று சேமிக்கப்படும் ஒரு முதலீடு. ஆபத்து காலத்தில் தங்கம் உதவும் என்பதற்காகவே பெண்கள் நகைகளை சேகரிக்க விரும்புகிறார்கள்.
ஒரு சிலரிடம் மட்டுமே தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் உள்ள தங்கத்தை அடமானமாக வைத்தும், அதை மீட்க முடியாமலும் இருக்கும் சூழலே ஏற்படுகிறது. பெண்களின் திருமணத்திற்கு கூட தங்கத்தை சேர்த்து வைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்கள் சில எளிய பரிகாரங்கள் செய்தாலே வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். தங்கம் வாங்க, சேர, நிலைத்திருக்க சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
தங்கம் சேர கடைபிடிக்க வேண்டியவை
நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் காரணமாக நம்மிடம் தங்கம் சேர்வதற்கு தடைகள் ஏற்படும். அதனை திருத்திக் கொண்டாலே போதும் நம்மிடமும் தங்கம் சேரும். தங்கம் சேர கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தங்கத்தை நாம் அனிந்த பிறகு அதனை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பீரோவில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தங்கத்தில் இருக்கும் தோஷம் அப்படியே இருந்து விடும். அதனால் ஒவ்வொரு முறையும் தங்கம் போட்டு கழட்டி வைக்கும் பொழுது அதனை மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு தான் வைக்க வேண்டும்.
தங்கத்தை நேரடியாக அப்படியே வைக்காமல் ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து தான் வைக்க வேண்டும். ஏனென்றால் சிவப்பு நிற துணியில் தங்கத்தை வைக்கும் பொழுது அது மென்மேலும் பெருக தான் செய்யும். அதுமட்டுமில்லாமல் சுக்கிர பகவானின் அருள் கிடைத்தாலே போதும் பணமும் தங்கமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.
வாசனை மிகுந்த இடம் எங்கே இருக்கிறதோ அங்கு தான் சுக்கிர பகவானும் மகாலட்சுமி தாயரும், வாசம் செய்வார்கள் அதனால் உங்களுடைய வீட்டை எப்பொழுதும் வாசனையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களின் அருளை பெற்று பண், தங்கம் போன்றவற்றை சேர்க்க முடியும்.
தங்கத்துடன் சேர்த்து வைக்க வேண்டிய பொருள்
பச்சைக் கற்பூரம் மிகவும் வாசனை மிகுந்த பொருள். இதற்கு பணம் விஷயத்தை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. அதை போல் தான் இதனை தங்கத்துடன் வைக்கும் பொழுது அதிகம் தங்கம் சேரும். பச்சைக் கற்பூரத்தை நாம் எந்த இடத்தில் வைக்கிறோமோ அந்த இடத்தில் சுக்கிர பகவானின் அருள் கண்டிப்பாக இருக்கும். இதை தங்கத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது தங்கம் அதிகம் வாங்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
அடுத்ததாக துளசி இலை, துளசி பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இப்படிப்பட்ட துளசியை நாம் தங்கத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது சுவர்ணலட்சுமியின் அருள் கிடைத்து தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த பொருட்களை தங்கத்துடன் சேர்த்து வைப்பதை கூட நாம் நல்ல நேரத்தில் தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு மென்மேலும் தங்கம் பெருகிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மி தாயாருக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் இல்லையென்றால் பௌர்ணமி அன்று இந்த பச்சைக் கற்பூரம் மற்றும் துளசியை நாம் தங்கத்துடன் சேர்த்து வைக்கலாம்.
இதனையும் படியுங்கள் : தங்கம் இல்லாத வீட்டில் கூட தங்கம் சேர! இந்த ஒரே ஒரு இலை கையில் இருந்தால் போதும்!
இந்த எளிய முறைகளை பின்பற்றினாலே போதும் சில நாட்களிலேயே படிப் படியாக வீட்டில் தங்கம் சேர துவங்கும். அல்லது அடமானமாக வைத்த நகைகளை மீட்க ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, அடமானமாக வைத்த நகை வீடு வந்து சேரும்.