ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

- Advertisement -

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டம் இருக்கும். இவை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்பது ஜோதிடத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதன்படியே இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை 25 நாட்கள் அக்னி வெயில் இருக்கும் என்கிறார்கள்.

- Advertisement -

அக்னி நட்சத்திரம் எப்போது மற்றும் யார் கவனமாக இருக்க வேண்டும்?

வழக்கமாக தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தைதான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, கும்ப ராசி ஆகிய நான்கு ராசிகள் இந்த காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அக்னி நட்சத்திரம்

அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஏற்ற படி அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது, சாப்பிடும் உணவு பழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நமது முன்னோர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் ஏன் வெளியே செல்ல கூடாது?

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கும். தலையில் நேரடியாக வெயில் பட்டால் மூளை நரம்புகள், பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு உடலில் பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றைத் தலைவலி, கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தோல் நோய்களும் ஏற்படும். அதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வெட்டிவேரை மோர் அல்லது பாலில் ஊற வைத்து வடிகட்டி சாப்பிட கோடை தொல்லைகளான‌ நாவறட்சி, அதிக தாகம் போன்றவை தீரும். வெட்டிவேர் பொடியை பாலில் கலந்து இனிப்பு சேர்த்து சாப்பிட, கண் சூடு, தொண்டை வலி, நாவறட்சி அதிக தாகம் தீரும். மண்பானை நீரில் சிறிதளவு வெட்டிவேரை போட்டு வைத்து குடித்தால் வெம்மை தீரும்.

-விளம்பரம்-

அக்னி நட்சத்திர பரிகாரம்

அக்னி நட்சத்திர காலத்தில் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், வெயிலின் தாக்கத்தால் உஷ்ணம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களை நாம் என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், உணவுமுறையில் மாற்றம் கொண்டு வந்தாலும் தடுக்க முடிவதில்லை. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க முருகப் பெருமானையும், மீனாட்சி அம்மனையும் வழிபடுவது சிறப்பானது. அல்லது சூரிய காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய காயத்ரி மந்திரம் ஆகியவற்றை சொல்லி வழிபடுவது சிறப்பானது.

இதனையும் படியுங்கள் : சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?