ருசியான சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இந்த பஜ்ஜியின் சுவையே தனி தான்!

- Advertisement -

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை பஜ்ஜி செய்வது எப்படி என்று காண உள்ளோம்.

-விளம்பரம்-

இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. அந்த வகையில் இந்த கிழங்கு இரத்தம் சுத்திகரிக்க, இதயத்தை பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. இந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும். இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே கிழங்கின் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.

- Advertisement -

காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, காய்கறிகளை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது தான். எனவே அந்த கிழங்கை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் மாலை வேளையில் டீ/காபி குடிக்க கொடுக்கும் வேளையில் செய்து கொடுத்தால், அவர்களின் பசி நீங்கும். தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி செய்து அசத்திடலாம்.

Print
No ratings yet

சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி | Sweet Potato Bajji Recipe In Tamil

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை பஜ்ஜி செய்வது எப்படி என்று காண உள்ளோம். இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, காய்கறிகளை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது தான். எனவே அந்த கிழங்கை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Sweet Potato Bajji
Yield: 4 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 4 சர்க்கரை வள்ளி கிழங்கு
  • 1/2 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சமையல் சோடா
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சக்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி அதன் தோல் சீவி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சமையல் சோடா, கரம் மசாலா தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சர்க்கரை வள்ளி கிழங்கை பஜ்ஜி மாவில் முக்கி சூடான எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
  • இது ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்கு மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
  • அவ்வளவுதான் சிறிது இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 3.7g | Protein: 3.6g | Fat: 1.2g | Sodium: 55mg | Potassium: 337mg | Fiber: 3.9g | Sugar: 1.3g | Vitamin A: 76IU | Vitamin C: 31mg | Calcium: 71mg | Iron: 2.55mg

இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தோன்றும்!