மதிய சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான கேரட் குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு சட்டி சோறும் மொத்தமும் காலியாகும்!
குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள
குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காரக்குழம்பு, வத்த குழம்பு போன்ற சுவையான குழம்பு வகைகளில் கேரட் குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த கேரட் குழம்பு சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் கேரட்டில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் கேரட்டை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரட்டை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த கேரட் குழம்பு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, இட்லி, சாதம் என அனைத்திற்கும் அற்புதமாக இருக்கும். கேரட் குழம்பு என்றதும் பலர் முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த குழம்பில் கேரட்டை நன்கு வதக்கி செய்வதால், நிச்சயம் இந்த குழம்பை நினைத்து சலிப்பு வராது. சுவையான கேரட் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.