மதிய சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான கேரட் குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு சட்டி சோறும் மொத்தமும் காலியாகும்!

- Advertisement -

குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காரக்குழம்பு, வத்த குழம்பு போன்ற சுவையான குழம்பு வகைகளில் கேரட் குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இந்த கேரட் குழம்பு சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் கேரட்டில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் கேரட்டை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரட்டை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த கேரட் குழம்பு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, இட்லி, சாதம் என‌ அனைத்திற்கும் அற்புதமாக இருக்கும். கேரட் குழம்பு என்றதும் பலர் முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த குழம்பில் கேரட்டை நன்கு வதக்கி செய்வதால், நிச்சயம் இந்த குழம்பை நினைத்து சலிப்பு வராது. சுவையான கேரட் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
3.50 from 2 votes

கேரட் குழம்பு | carrot curry recipe in tamil

குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காரக்குழம்பு, வத்த குழம்பு போன்ற சுவையான குழம்பு வகைகளில் கேரட் குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த கேரட் குழம்பு சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் கேரட்டில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் கேரட்டை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரட்டை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: carrot curry
Yield: 4 People
Calories: 35kcal

Equipment

  • 2 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட்டை நன்கு கழுவி, தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் வதங்கியதும் கொடுத்துள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
  • இவை நன்கு சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • நாம் அரைத்து வைத்துள்ள விழுதை வேகும் கேரட்டில் சேர்த்து கொதிக்க விடவும்.
    தேவையான அளவு உப்பு இரண்டு நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் முள்ளங்கி குழம்பு தயார்.
  • பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான சத்தான கேரட் குழம்பு சுவைக்கத்தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 35kcal | Carbohydrates: 4.2g | Protein: 7.8g | Fat: 0.2g | Potassium: 320mg | Fiber: 3.1g | Sugar: 1.7g | Vitamin A: 835IU | Vitamin C: 5.9mg | Calcium: 33mg | Iron: 0.9mg